அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் இல்லத்தில் சோதனை

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அதிமுக ஆட்சியில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த சி.விஜயபாஸ்கர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து இருப்பதாக புகார் பதிவு செய்யப்பட்டு விசாரனை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை நடத்துகிறது, இதன் தொடர்பாக சி.விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீடு மட்டும் பல இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர் விஜயபாஸ்கர், எஸ்.பி வேலுமணி, கேசி வீரமணி ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்