திருகோணமலைக்கு மேற்கே மையம் கொண்டுள்ள "டிட்வா" சூறாவளி !
இலங்கையில் பெரும் இயற்கை அனர்த்தங்களை ஏற்படுத்தி வரும் "டிட்வா" சூறாவளி புயல் இன்று இலங்கைநேரம் அதிகாலை 2.00 மணிக்கு திருகோணமலைக்கு வடமேற்கே சுமார் 60 கி.மீ தொலைவில், அட்சரேகை 8.8°வடக்கு மற்றும் தீர்க்கரேகை 80.8°கி அருகில் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.