website analysis

நாட்டில் மண்ணெண்ணெய் பாவனை அதிகரிப்பு!

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
நாட்டில் தற்போது மண்ணெண்ணெய் பாவனை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
தற்போது நிலவும் சமையல் எரிவாயுவின் தட்டுப்பாட்டின் காரணமாக இவ்வாறு மண்ணெண்ணெய் பாவனை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பொதுவாக நாட்டில் நாளாந்த மண்ணெண்ணெய் பாவனை கடந்த காலத்தில் 600 மெற்றிக் தொன்களாகும். ஆனால் தற்போது நாளாந்த பாவனை 850 மெற்றிக் தொன்களாக அதிகரித்துள்ளது.

மண்ணெண்ணெயை விற்பனை செய்யும் எரிபொருள் நிலையங்களுக்கு ஆகக் கூடுதலான வகையில், மண்ணெண்ணெய் விநியோகிக்கப்பட்டுள்ளது. மண்ணெண்ணெய்க்கு தட்டுப்பாடு இல்லை என்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் எதிர்வரும் சில தினங்களில் சமையல் எரிவாயுவிற்கான தட்டுப்பாடு முழு அளவில் நிவர்த்திக்கப்படும் என்று லிட்றோ எரிவாயு நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்