இத்தாலியை நோக்கி மூன்று ஆண்டுகளின் பின் ஈஸ்டர் விடுமுறையில் கோவிட் பெருந் தொற்றுக்குப் பின்னதாக, இத்தாலியின் பயணவிதிகள் தளர்த்தப்பட்டிருக்கும் நிலையில், பெருமளவிலான ஐரோப்பிய மக்கள் குவிந்து வருகின்றனர்.
இம்முறை ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு வரும் தொடர்ச்சியான விடுமுறை நாட்களை இத்தாலியில் கழிப்பதற்காக ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் இருந்து மக்கள் குவிந்து வருகின்றார்கள். இதனால் இத்தாலியின் அண்டையாநாடுகளை இத்தாலியுடன் இணக்கும் எல்லைப்புற நெடுஞ்சாலைகளும், இத்தாலியின் பிரதான நகரங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலைகளும் வாகனங்களால் நிறைந்திருக்கின்றன. இதனால் மிகுதியான போக்குவரத்து நெரிசலும் காலதாமதமும் ஏற்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை மதியம் மற்றும் திங்கட்கிழமைகளில் மிக உயர்ந்த அளவிலான போக்குவரத்து நெரிசல்கள் நாட்டின் பல பகுதிகளில் ஏற்பட வாய்ப்புள்ளது என்று Autostrade per l'Italia எச்சரித்துள்ளது.
ரஷ்யாவின் மிகப் பெரிய ஏவுகணைக் கப்பல் மூழ்கியது !
பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா மற்றும் ஜெர்மனியில் இருந்து பலர் இத்தாலிக்கு பயணத்தைத் தொடங்கியதால், நேற்று வியாழக்கிழமை மாலை முதலே இத்தாலியின் எல்லைகளில் நீண்ட வரிசைகள் உருவாகத் தொடங்கின.
வெள்ளிக்கிழமை காலை பிரான்சில் இருந்து இத்தாலிக்கு மோன்ட் பிளாங்க் சுரங்கப்பாதை வழியாக வருபவர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருப்பு நேரத்தை அறிவித்தது. மற்றும் சுவிட்சர்லாந்தில் இருந்து கோத்தார்ட் சுரங்கப்பாதை வழியாக நுழைபவர்கள் இரண்டு மணிநேரம், காத்திருக்க வேண்டியிருந்தது.
இதேவேளை இத்தாலி முழுவதும் உள்ள வடக்கு-தெற்கு வழித்தடங்களில் வெள்ளிக்கிழமைக்குப் பிறகு கடுமையான போக்குவரத்து எதிர்பார்க்கப்படுகிறது, பெரும்பாலான பயணிகள் கடலோர அல்லது மலைப் பகுதிகளுக்குச் செல்கின்றனர். இத்தாலியில் வெள்ளிக்கிழமை பொது விடுமுறை இல்லை, ஆதலால் இத்தாலியர்கள் பலர் வெள்ளிக்கிழமைக்குப் பிறகு தங்கள் விடுமுறைக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பின்வரும் முக்கிய வழித்தடங்களில் அதிக போக்குவரத்து நெரிசல் எதிர்பார்க்கலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
– ஏ1 மிலன் – நாப்போலி
– A4 தொறினோ – திறிஸ்தே
– A6 டுரின் – சவோனா
– ஏ7 மிலன் – ஜெனோவா
– A10 ஜெனோவா - வென்ரிமில்யா
– A12 ஜெனோவா – ரோம்
– A14 போலோக்னா – டரன்டோ
– A24 – A25 ரோம் – தெராமோ - பேஸ்காரா
– A26 ஜெனோவா – கிராவெல்லோனா
ஆகிய வழித்தடங்களில், பிற்பகல் மற்றும் மாலை நேரங்களில் நெடுஞ்சாலைகளில் நெரிசலை எதிர்பார்க்குமாறு சாரதிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.