Top Stories

Grid List

ஈழத்தின் புகழ் பூத்த பாடகரான எஸ்.ஜி.சாந்தன் என்று அழைக்கப்படும் குணரத்னம் சாந்தலிங்கம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலமானார். 

முல்லைத்தீவு கேப்பாபுலவு- பிலவுக்குடியிருப்பில் விமானப்படையின் அத்துமீறிய ஆக்கிரமிப்பிலுள்ள தமது 42 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு கோரி பொதுமக்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை 27வது நாளாக தொடர்ந்து வருகின்றது. 

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈபிடிபி) யாழ்ப்பாண அலுவலகமா இயங்கும் சிறிதர் தியேட்டரின் மின்சார கட்டண நிலுவை 85 இலட்சத்து 50 ஆயிரத்து 982 ரூபாவினை செலுத்துமாறு அறுவுறுத்தல் கடிதம் அனுப்பியுள்ளதாக இலங்கை மின்சார சபையின் யாழ். மாவட்ட பணிப்பாளர் ஞானகணேசன் தெரிவித்துள்ளார். 

பிரதேச, நகர மற்றும் மாநகர சபைகளுக்காக முன்மொழியப்பட்டுள்ள புதிய கலப்பு உள்ளூராட்சி தேர்தல் முறை, இந்நாட்டில் வாழும் சிறுபான்மையினரைச் தூக்கிச் சாப்பிட்டுவிடும் என்று தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

அதிமுகவை சேர்ந்த ஜோசப் என்பவர் நீதிமன்றத்தை நாடி ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள சந்தேகங்கள் தொடர்பாக மனுத்தாக்கல் செய்தார். 

தி.மு.க. மட்டுமல்ல தமிழகமே தயார்: குஷ்பூ என்று டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். 

ஹைட்ரோகார்பன் எடுக்கும் மத்திய அரசின் திட்டத்துக்கு எதிரான நெடுவாசல் மக்களின் போராட்டம் தமிழகம் எங்கும் விரிவடையாத துவங்கி உள்ளது. 

மகாத்மாகாந்தி வேலை உறுதி திட்டத்தில் தமிழகத்தில் 150 நாட்கள் வேலைக்கு அனுமதி அளித்து மத்திய அரசு உத்தரவுப் பிறப்பித்துள்ளது. 

இன்று ஞாயிற்றுக்கிழமை அவுஸ்திரேலியாவுக்கான தனது 5 நாள் உத்தியோக பூர்வ விஜயத்தை ஆரம்பித்து சிட்னியை வந்தடைந்துள்ளார் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு மற்றும் அவரது துணைவியார் சாரா. ஒரு இஸ்ரேல் பிரதமராகத் தனது முதல் அவுஸ்திரேலிய விஜயத்தை மேற்கொண்டிருந்த பெஞ்சமின் இன்று ஞாயிறு அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் ஜுலியே பிஷோப்பை சந்தித்துப் பேசியுள்ளார்.

பெப்ரவரி 13 ஆம் திகதி வடகொரிய அதிபரின் சகோதரரான கிம் ஜொங் நம் என்பவர் மலேசிய விமான நிலையத்தின் பட்ஜெட் டேர்மினலில் வைத்து ரகசிய பெண் ஏஜண்டு மூலம் விஷ ஊசி செலுத்தப் பட்டுக் கொலை செய்யப் பட்டார். குறித்த விஷ ஊசி பேரழிவை ஏற்படுத்தக் கூடிய ஒரு ஆயுதம் என ஐ.நா பிரகடனப் படுத்தியுள்ள நிலையில் மலேசிய விமான நிலையத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப் படுத்தப் பட்டிருப்பதாக அந்நாடு அறிவித்துள்ளது.

வங்கதேசத்தைப் பூர்விகமாகக் கொண்ட ஹிஜாப் அணிந்த முன்னால் முஸ்லிம் பெண் வெள்ளை மாளிகை ஊழியரான ருமானா அஹ்மெட் என்பவர் டிரம்பின் அண்மைய 7 முஸ்லிம் நாடுகளுக்கான விசா தடை உத்தரவை அடுத்துத் தான் சுய விருப்பத்தின் பேரில் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். 2011 முதல் வெள்ளை மாளிகை ஊழியராகவும் NSC எனப்படும் வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்புக் கவுன்சிலின் உறுப்பினராகவும் கடமையாற்றிய இவர் டிரம்பின் புதிய நிர்வாகத்தின் கீழ் வெறும் 8 நாட்களே கடமையாற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுவிற்சர்லாந்து நாட்டில் பல இடங்களில் இதுவரையில்லாத அளவு பிப்ரவரி மாதத்தில் வெயில் அதிகரித்துள்ளது. 

Most Read

Top Stories

Grid List

மயிரிழையில் தப்பியிருக்கிறார் சிம்பு. கொஞ்சம் அசந்திருந்தாலும் குடும்பத்தோடு தமிழக மக்களின் திருவாய்க்குள் சட்னியாகியிருப்பார்.

பாலிவுட் செழுமைக்கு காரணம் நடிகர் அக்ஷய் குமார்தான் என்பதால், பாலிவுட்டில் தயாரிப்பாளர்கள் விரும்பும் நடிகர் அக்ஷய் குமார் என்று பாலிவுட் வட்டாரங்கள் கொண்டாடி மகிழ்ந்து வருகிறன. 

தெலுங்கிலிருந்து தமிழுக்கு வரும் ஹீரோக்கள் பலரும் சூர்யாவை ‘சூப்பர் ஸ்டார் சூர்யா’ என்றே அழைக்கிறார்கள்.

நாட்டு நடப்பை கூர்ந்து கவனித்து வரும் நடிகைகளில் மிக மிக முக்கியமானவர் நயன்தாராதான்.

இம்முறை 69வது லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில் Fuori Concorso பிரிவில் பார்க்க கிடைத்த ஆவணத் திரைப்படம், «ஜோன் சியேக்லரும், மன உறுதியின் நம்பிக்கையும்» (Jean Ziegler, the Optimism of Willpower). இத்திரைப்படம் சுவிற்சர்லந்தானின் பொதுவுடமைச் சித்தாந்த மனிதர் ஜோன் சியேக்லரின் அரசியல், உலக அனுபவங்களை எம்முடன் பகிர்ந்து கொள்கிறது. 

Ralitza Petrova இயக்கிய Godless எனும் பல்கேரியத் திரைப்படம் இம்முறை 69வது லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில் "தங்கச் சிறுத்தை" (Pardo d’Oro) வென்றது. 

69 வது லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இதுவரை பியாற்சே கிராண்டே திரையரங்கில் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டவர்களில் மிக முக்கியமான இருவர் Roger Corman மற்றும் Hervey Keitel. 

69 வது லோகார்னோ சர்வதேச திரைப்பட விழாவின்  6ம் நாளாகிய நேற்றைய தினம் (09.08.2016), Open Doors பகுப்பில் வெற்றி பெற்ற திரைப்படங்கள் அறிவிக்கப்பட்டு, விருதுகள் வழங்கப்பட்டன.  

ஆமையை வைத்து படம் எடுத்தாலும், அதையும் ஆறு கால் பாய்ச்சலில் ஓட வைப்பதுதான் டைரக்டர் ஹரியின் ‘ரன்வே’ மனசு! இந்தப்படத்தில் சிங்கமே கிடைத்திருக்கிறது.

நோக்கு வர்மத்தை மறந்தவர்களுக்கு வேண்டுமானால் ‘போகன்’ புதுசா இருக்கலாம்! மற்றபடி தமிழ்சினிமாவும் ரசிகர்களும் முன்பே ‘அனுபவித்த’ படம்தான் இது. ஆனால் அரவிந்த்சாமி என்ற நடிப்பு ராட்சசன், நம்மை விரல் கூட்டிக் கொண்டு நடக்கிறார் நடக்கிறார்.

‘நண்பேன்டா’ என்று நெஞ்சை நிமிர்த்துகிற பிரண்ட்ஷிப், அதே நண்பனால் ‘செத்தேன்டா’ என்று தெறித்து ஓடினால் அதுதான் ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’. தற்கொலை செய்து கொள்வதாக அறிவித்துவிட்டு பதுங்கிவிடுகிற ஜெய்யை மீட்க, தேடுதல் வேட்டையை ஆரம்பிக்கிற அவரது மூன்று நண்பர்களுக்கு ஏற்படுகிற படு பயங்கர எக்ஸ்பீரியன்ஸ்தான் இரண்டரை மணி நேர படம்.

வைக்கோல் போரில் தீப்பெட்டியை ஒளித்து வைத்தவன், எந்த நேரத்திலும் பற்றும் என்று காத்திருப்பானல்லவா? அப்படி காத்திருக்க வைக்கிறார் பார்த்திபன்.

வடக்கு மாகாணத்தில் தற்போது நான்கு தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அதி்ல், மூன்று போராட்டங்கள் காணி மீட்பினை அடிப்படையாகக் கொண்டவை. மற்றையது, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ள நீதி கோரும் போராட்டம். அத்தோடு, இந்தப் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து வடக்கு- கிழக்கிலும், வெளியிலும் பரவலான கவனயீர்ப்புப் போராட்டங்களும் கடந்த நாள்களில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

ஜல்லிக்கட்டினை மீட்டெடுப்பதற்காக தமிழகம் பூராவும் இளைஞர்கள் வீதிக்கு இறங்கியிருக்கின்றார்கள். இரவு பகல் பாராமல், உணவு தூக்கம் மறந்து தமது பாரம்பரிய அடையாளத்தையும் உரிமையையும் மீட்பதற்காக தன்முனைப்புப் பெற்றிருக்கின்றார்கள். அரசியல் கட்சிகளும், தலைவர்களும் புறந்தள்ளப்பட்டு இளைஞர்கள் தலைமையேற்றிருக்கும் போராட்டத்துக்கு பின்னால் பொதுமக்கள் அணி திரண்டிருக்கின்றார்கள். 

போர்க்குற்றங்கள், காணாமல் ஆக்கப்படல், சித்திரவதை, பாலியல் வல்லுறவு உள்ளிட்ட மனித குலத்துக்கு எதிரான குற்றங்களுக்கு ‘பொதுமன்னிப்பு’ அளிக்கப்படக்கூடாது என்பதை நல்லிணக்க பொறிமுறைகளுக்கான கலந்தாலோசணைச் செயலணியின் இறுதி அறிக்கை வலியுறுத்துகின்றது. 

தமிழக அரசியலில் அதியுச்ச அதிகாரத்தோடு வலம் வந்த தலைவர் ஒருவரின் மறைவுக்குப் பின்னரான தருணங்கள் இராணுவ ஒழுங்குடனும், திட்டமிடலுடனும் முன்னேடுக்கப்பட்டு வருகின்றன. தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராமின் மறைவும், அவர் நோய்வாய்ப்பட்டு வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நாட்களும் ஆயிரத்தெட்டுக் கேள்விகளால் நிறைந்தவை. அந்தக் கேள்விகள் பெரும்பாலானவற்றுக்கு இன்னமும் பதில்கள் ஏதும் சம்பந்தப்பட்டவர்களினால் வழங்கப்படவில்லை. ஆனால், ஜெயலலிதா ஜெயராம் என்கிற ஆளுமை தற்போது அரங்கில் இல்லை என்பது மாத்திரம் உண்மை. அந்த உண்மையை இயல்புக்கு மாறிய வேகத்துடன் உள்வாங்கி பிரதிபலித்ததில் அரசியல் அதிகாரத்தளம் முக்கியமானது.  

சில வருடங்களுக்கு முன்னர் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் பெண்மணி. வீதியில் கண்டதும் மகிழ்ச்சியுடன் பேசினார். ஏற்கனவே பாசமானவர்தான். இருந்தாலும் இன்னும் கொஞ்சம் பாசம் அதிகரித்ததுபோல இருந்தது. வியந்துபோய் யோசித்தேன். மகளுக்கு திருமணம் முடிந்துவிட்டதாகச் சொன்னார். 

“தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு, 2016ஆம் ஆண்டுக்குள் தீர்வு காணப்பட்டுவிடும். அதற்கான முயற்சிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்தவித விட்டுக் கொடுப்புமின்றி முன்னெடுத்து வருகின்றது. ஜாதிக ஹெல உறுமய உள்ளிட்ட சிங்களக் கடும்போக்குத் தளங்களுடன் கூட நாம் பேசி வருகின்றோம். இந்த ஆண்டுக்குள் தீர்வு கிடைக்கவில்லை என்றால், தமிழ் மக்களுக்கு என்றைக்குமே தீர்வு கிடைக்காது. அதற்கான வாய்ப்புக்களும் எதிர்காலத்தில் அமையாது.” 

சிரியாவின் அலெப்போ, இன்னுமொரு முள்ளிவாய்க்காலாக மாறிக் கொண்டிருக்கிறது. 2009ம் ஆண்டு மே மாதம், இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், அரச இராணுவத்தினருக்கும் இடையிலான மோதல்கள், இறுதிக் கட்டத்தை எட்டிய போது முள்ளிவாய்க்கால் பகுதியில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் சுற்றிவளைக்கப்பட்டிருந்தனர். விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து இராணுவப் பகுதிகளுக்கு அச்சம்/அழுத்தம்/உயிராபத்து காரணமாக அவர்கள் இடம்பெயரத் தொடங்கிய போது அந்த இனப்படுகொலைகள் நடந்தேறின. 

இப்போது நீங்கள் பார்க்கும் இந்தப் பெண் இல்லை நான். எப்போதும் இப்படியான பெண்ணாக இருந்ததில்லை. அதிக கூச்சமுடைய, அன்னியர்களை சந்திக்க விரும்பாத, அதுவுமில்லாமல், மற்றவர்களால் கவனிக்கப்படுவதை அறவே வெறுத்த பெண் நான்.” 

நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீதுர்முகி வருஷம் தக்ஷிணாயணம் ஹேமந்த ரிது மார்கழி மாதம் 17ம் தேதி, 01 ஜனவரி 2017,  ஞாயிற்றுக்கிழமையும் சுக்ல திரிதியையும் திருவோண நக்ஷத்ரமும் ஹர்ஷண நாமயோகமும் கரஜி கரணமும் அமிர்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி இரவு 12 மணிக்கு கன்னியா லக்னத்தில் ரிஷப நவாம்சமும் மகர திரிகோணமும் கொண்டு ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கிறது.

மீனம்: தனது வாழ்க்கையை தனக்கு மட்டுமல்லாமல் மற்றவருக்கும் பயன்படுமாறு வாழும் மீன ராசி அன்பர்களே !

கும்பம்: எடுத்த காரியம் எவ்வளவு கடினமான காரியமாக இருந்தாலும் தனது புத்தி சாதுர்யத்தால் எளிதாக முடிக்கும் கும்ப ராசி அன்பர்களே !

மகரம்: எந்த காரியத்தையும் செய்யும் முன் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்யும் மகர ராசி அன்பர்களே !