counter create hit லொகார்னோ பியாற்சா கிரான்டே பெருமுற்றம் மீண்டும் அழகானது !

லொகார்னோ பியாற்சா கிரான்டே பெருமுற்றம் மீண்டும் அழகானது !

Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

லொகார்னோ 75 சர்வதேச திரைப்படவிழா (2022) ஆரம்பமாகியது. 2019-20 கோவிட் பெருந்தொற்றினால் முற்றாக டிஜிட்டல் முறைக்கு மாற்றமடைந்து தனது பல்லாயிரக்காண நேரடிப் பார்வையாளர்களை இழந்திருந்த இந்த திரைப்பட விழா இவ்வருடம் மீண்டும் பழைய உற்சாகத்துடனும், புதுப்பொலிவுடனும் தொடங்கியுள்ளது.

லொகார்னோ நகர் முழுவதும் சினிமாத் திருவிழாவின் சிறப்புக்களால் நிறைந்திருக்கிறது. மறுபடியும் திரை ஆர்வலர்களால்க இந்நகரமும், சுற்றுலா விடுதிகளும் நிரம்பி வழியத் தொடங்கியிருக்கின்றன. 8000க்கு மேற்பட்ட பார்வையாளர்களை Piazza Grande பெரும்முற்றம் நேற்றைய முதல் காட்சிலேயே பதிவு செய்திருக்கிறது. அடுத்துவரும் பத்து நாட்களுக்கான பல திரைக்காட்சிகளுக்கான இருக்கை முன்பதிவுகள் இப்போதே விற்றுத் தீர்க்கப்பட்டுள்ளன. ஆனால், இத் திரைப்பட விழாவை, எதிர்கால சவால்களுக்கு தயார்படுத்த தொடங்கியிருக்கிறோம் என்கிறார் இத்திரைப்பட விழாவின் செயல் இயக்குனர் Raphael Brunschwig.

இன்றைய மக்கள் மேலும் மேலும் பிளவுபட்ட சமூகமாகிவிட்டனர். கலை படைப்பின் உருவாக்கங்களும், நுகர்வும் என்றைக்கும் இல்லாதளவு டிஜிட்டல் ஆகிவிட்டது. எதையும் பார்த்தல், எப்போதும் பார்த்துக் கொண்டே இருத்தல் எனும் அளவுக்கு பார்ப்பதில் அடிமையாகிவிட்டோம். இதற்கெல்லாம் இந்த சினிமா துறையின் பதில் என்ன ? எப்படி இந்த திரைப்பட விழா தனது ஈர்ப்பாளர்களை தக்க வைத்துக் கொள்ள முடியும் எனும் கேள்விகளுக்கு பதில் காணும் விதமாகவே எதிர்காலத்தை பற்றி யோசிக்க ஆரம்பித்துள்ளோம் என்கிறார் அவர். இதனாலேயே நவீன தொழில்நுடங்களையும் பார்வையாளர்களின் ஈர்ப்பிருக்கும் டிஜிட்டல் தளங்களையும் இந்த வருட திரைப்பட விழா உள்வாங்கிக் கொண்டிருக்கிறது.

லொகார்னோவில் திரையிடும் குறுந்திரைப்படங்களை புதிய தலைமுறைகளுக்கு இன்னமும் ஆழமாக கொண்டு செல்லும் வகையில் Shorts Weeks இணையத்தளத்துடன் இணைந்து டிஜிட்டல் வெளியீடு செய்யவிருக்கிறார்கள். அதோடு இயக்குனர்களின் இரண்டாம், மூன்றாம் முழு நீளத் திரைப்படங்கள் போட்டிப் பிரிவில் (Concorso Cineasti del Presente) காண்பிக்கப்படும் திரைப்படங்களை, Swisscom தொலைக்காட்சி வழி பார்ப்பதற்கும், அதன் Streaming App இல் காண்பிக்கவும் திட்டமிட்டிருக்கிறார்கள்.

அதோடு Open Doors Toolbox எனும் டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் Open Door பிரிவில் காண்பிக்கப்படும் படங்களின் தென் அமெரிக்க திரைப்படக் கலைஞர்களை டிஜிட்டல் முறையில் லொகார்னோ திரைப்பட விழாவுடன் இணைக்கவும், இதனை பார்வையிடும் வசதியையும் ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

நேற்று ஆகஸ்டு 3ம் திகதி உத்தியோகபூர்வமாக பியாற்சே கிராண்டே திறந்த வெளி முற்றத்தில் தொடங்கிய பெருவிழாவில் பிரெட் பிட் நடித்த Bullet Train அமெரிக்க திரைப்படம் தொடக்கப் படமாக காண்பிக்கப்பட்டது.

இங்கிலாந்து நடிகர் Aaron Taylor-Johnson க்கு Excellence விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டது. 6 வயதிலிருந்து நடிக்கத் தொடங்கிய ஆரொன் Shanghai Knights (2003), The Illusionist (2006), The Thief Lord (2006), and Angus, Thongs and Perfect Snogging (2008), படங்களால் பெரிதும் பிர்பலமானவர். இவர் Marvel Cinematic Universe இல் Pietro Maximoff கதாபாத்திரத்தில் Avengers இல் நடிபப்வர். எப்போதும் வெவ்வேறு கதைக்களத்தில், வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடிப்பவர்.

அவருக்கு விருது வழங்கிய போது அவரிடமே இது தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது. எப்படி இவ்வளவு வித்தியாசமான கோணங்களில் நடிக்க முடிகிறது? அதற்கு அவர், நடிப்பு என்பதும் ஒரு Team work தான். நான் யார் யாரை பார்த்து, அவர்கள் ஈர்ப்பில் அவர்களின் பாவணைகளை அப்படியே பிரதிபலிக்கிறேன் என்பது அவர்களுக்கே தெரியாது. ஆனால் அவர்கள் இந்த சமூகத்தில் எம்மை சுற்றியிருப்பவர்கள் தான். நான் அவர்களுடைய பிரதி மாத்திரமே. அவர்களுக்கு தான் நன்றி என்கிறார்.

லொகார்னோவில் போட்டிப் பிரிவில் தெரிவான முதல் கேரள திரைப்படம்!

இம்முறை தங்கச்சிறுத்தை விருதுகளுக்கான போட்டிப் பிரிவில் மகேஷ் நாராயணனின் " அரியிப்பு " திரைப்படம் இடம்பிடித்துள்ளது.

லொகார்னோவின் முழு நீளத் திரைப்பட போட்டிப் பிரிவில் இருக்கும் முதல் கேரளத் திரைப்படம் இதுவாகும். பணிபுரியும் தொழிற்சாலையில் இரகசியமாக படம்பிடிக்கப்பட்ட ஒரு காணொளிக் காட்சி எப்படி ஒரு இளம் கணவன் மனையிவின் குடும்ப வாழ்க்கையை சிதைக்கிறது என்பதையொட்டிய சமூக அக்கறை மிக்க படமிது.

அதோடு இம்முறை லொகார்னோவில் திரை விமர்சகர்களால் பெரிதும் எதிர்பார்ப்புடன் குறிவைக்கப்பட்டுள்ள திரைபப்டங்களின் வரிசையில், பிரெஞ்சு நடிகை Juliette Binoche அமெரிக்க டிரக் வண்டி ஓட்டுனராக நடிக்கும் Paradise Highway, Sylvain George இன் நான்கு மணிநேர ஆவணத் திரைப்படமான Obscure Night, ரஷ்ய இயக்குனர் Alexksandre Sokurov இன், வல்லரசு அரசியல் தலைவர்களை மையப்பொருளாக கொண்டு விமர்சிக்கும் Skazka, Leon Prudovsky இன், My Neihbor Adolf என்பவற்றை சொல்லலாம். ஹிட்லர் தற்கொலை செய்துகொள்ளாமல், ஒரு ஓவியராக இன்னமும் உயிரோடு வாழ்ந்து, உங்கள் பக்கத்துவீட்டுக்கு தலைமைறைவாக இடம்பெயர்ந்து வந்திருந்தால், உங்கள் சந்தேகம் எப்படி இருக்கும் என புனையப்பட்டிருக்கும் படமிது. இந்த படத்தை லொகோர்னோவில் திரையிடக் கூடாது, இதன் நிதிப் பின்புலத்தில் சதி நடந்திருக்கிறது என எதிர்ப்பு வந்ததும், கலைப்படைப்பின் சுதந்திரத்தை ஒரு போதும் லோகார்னோ நசுக்குவதில்லை என விழாத் தரப்பு சொன்னதும் குறிப்பிடத்தக்கது.

- லொகார்னோவிலிருந்து 4தமிழ்மீடியாவின் செய்தியாளர்கள்

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 
We use cookies

We use cookies on our website. Some of them are essential for the operation of the site, while others help us to improve this site and the user experience (tracking cookies). You can decide for yourself whether you want to allow cookies or not. Please note that if you reject them, you may not be able to use all the functionalities of the site.