counter create hit திருக் கோணேஸ்வரம் நான்கு நூற்றாண்டுகளுக்கு முன் !

திருக் கோணேஸ்வரம் நான்கு நூற்றாண்டுகளுக்கு முன் !

கி.பி. 7ம் நூற்றாண்டில் வாழ்ந்த சைவ சமயகுரவர்களில் ஒருவராகிய திருஞானசம்பந்தப் பெருமான், இராமேஸ்வர தீர்த்தக் கரையில் நின்று " கரைகெழு சந்துங் காரகிற் பிளவு மளப்பருங் கனமணி வரன்றிக் குரைகட லோத நித்திலங் கொழிக்குங் கோணமா மலையமர்ந் தாரே " எனத் திருக்கோணேஸ்வரப் பெருமானைப் பாடியருளினார்.

கி.பி. 17ம் நூற்றாண்டில் கோணேஸ்வரப் பெருமான் கோவில் கொண்டருளிய திருத்தலத்தை போர்த்துக்கீசர் இடித்து, அக் கற்களினால் பெருங்கோட்டையைக் கட்டினர். அக்கோவிலின் பெருஞ்சிற்பங்கள் யாவும், சிறுகற்களாகி, கோட்டைப் பெருஞ்சுவராகி நிற்கும் இன்றைய நிலையில், AI செயற்கை நுன்னறிவுத் தொழில்நுட்பத்தின் மூலம், 400 ஆண்டுகளுக்கு முன் திருக்கோணேஸ்வரர் ஆலயச் சூழல் எவ்வாறிருந்த என்பதனை தேடல் மிக்க இளைஞரும், மருத்துவருமான ஜீவராஜ் வடிவமைத்து, பதிவு செய்திருக்கும் அருமையான விளக்கக் கானொலி இது.

"குற்றமி லாதார் குரைகடல் சூழ்ந்த கோணமா மலையமர்ந் தாரைக்
கற்றுணர் கேள்விக் காழியர் பெருமான் கருத்துடை ஞானசம் பந்தன்
உற்றசெந் தமிழார் மாலையீ ரைந்து முரைப்பவர் கேட்பவ ருயர்ந்தோர்
சுற்றமு மாகித் தொல்வினை யடையார் தோன்றுவர் வானிடைப் பொலிந்தே."

 

Comments powered by CComment

400 ஆண்டுகளுக்கு முன் திருக்கோணேஸ்வரர் ஆலயச் சூழல் எவ்வாறிருந்தது என்பதன் தேடல்

Comments powered by CComment

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

Ula