இலங்கை பைலா பாடல்கள் இன்றும் பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள் கேட்டால் பரவசமடைவர். இப்போது பேருந்துகளில்தான் அதிகமாக பைலா பாடல்களை கேட்கமுடிகிறது.
வளர்ந்துவரும் படைப்பாளர்கள் ஆக்கபூர்வமாக இசைத்துறையிலும் பல்வேறு நவீனத்தை படைத்துவருவதோடு அவை பல பரிணாமங்களில் வெளியாகி வருகின்றன. அவ்வகையில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட இந்த மூன்று இளைஞர்கள் ராப் சிலோன் எனும் பெயரில் யூடியூப் சேனலை நடத்திவருகின்றனர், பெயரை போன்றே ராப் வகை இசையுடன் பைலா மெட்டையும் கலந்து யாழ் பேச்சுவழக்க மொழி வரிகளில் இசைப்பாடல்களை உருவாக்கிவருகின்றனர். இவர்களின் "கொழும்பு நகர்' "பவித்ரா" ஆகிய இசை ஆல்பங்கள் பிரபலமானவை.
Comments powered by CComment