மீனம்: பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி : மனக்கஷ்டத்தை வெளியில் காட்டாத மீன ராசி அன்பர்களே, 13-04-2022 அன்று குரு பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார். இதனால் குரு பகவானின் பார்வை பஞ்சம - களத்திர - பாக்கிய ஸ்தானங்களின் மீது விழுகிறது.
குடும்பத்தில் இளைய சகோதரி சகோடரர் ஆதரவு உங்களுக்கு உண்டு. உங்களுக்காக அவர்கள் எதையும் விட்டுக் கொடுத்து விடுவார்கள். ஒன்பதாம் பார்வையாக பூர்வ புண்ணிய ஸ்தானத்தை பார்க்கும் அவரால் உங்களுக்கு கொடுக்க வேண்டிய புண்ணியங்களையும் ,புத்தியையும் , புத்திர பாக்கியத்தையும் கொடுப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.
தொழிலில் எடுக்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். திட்டமிட்டு ஒவ்வொரு செயலையும் செய்து வாருங்கள். நன்மைகள் அதிகரிக்கும் . தந்தை வழி தொழில் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறமுடியும். உத்தியோகஸ்தர்கள் புதிய வேலை தேடுவது , வெளிநாட்டிற்கு செல்வது அனைத்துமே இனி உங்களுக்கு சாதகமாக நடக்கும்.மேலிடத்தில் பாராட்டு, பதவி உயர்வு இவை அனைத்தையும் குருபகவான் உங்களுக்கு அளிப்பார்.
பெண்கள் அனைவரின் பாராட்டும், அன்பும் கிடைக்கப் பெறுவீர்கள். நீண்ட நாட்களாக சந்தான பாக்கியம் இல்லாதவர்களுக்கு இப்போது குருபகவானின் பார்வையால் அது நடக்கப்போகிறது. மாணவர்கள் சங்கீதத்தில் நாட்டம் உள்ளவர்கள் மிக உயர்ந்த நிலைக்கு சென்று விடுவர். நண்பர்களுடன் இன்பச்சுற்றுலா சென்று வருவீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு மக்களின் ஆதரவும், செல்வாக்கும் கிடைக்கப் பெறுவீர்கள். நிர்வாகத்திறமையில் எந்த பிரச்சினைகளும் வராது.
கலைத்துறையினர் அனுபவமிகுந்தவர்களின் அறிவுரையின் பெயரிலேயே நீங்கள் நன்மை அடைவீர்கள். நல்ல வருமானம், புகழ் அனைத்தும் அதிகரிக்கும்.
நட்சத்திரப் பலனகள்:
பூரட்டாதி 4-ம் பாதம்:
இந்த குருப் பெயர்ச்சியில் உத்தியோகஸ்தர்கள் விருப்பங்கள் நிறைவேறும். குடும்பத்தில் நல்ல காரியங்கள் தடையின்றி நடந்து முடியும். மருத்துவச் செலவுகள் குறைந்துவிடும். உறவினர் வருகை மகிழ்ச்சி தருவதாக அமையும். நண்பர்களின் ஒத்துழைப்பு நல்ல முறையில் இருக்கும். மனைவி வழியில் அனுகூலமான செய்திகள் வந்து சேரும். பூர்வீகச் சொத்து வகையில் சிலர் எதிர்பாராத தனலாபத்தைப் பெறுவீர்கள்.
உத்திரட்டாதி:
இந்த குருப் பெயர்ச்சியில் சிறு தடங்கலுக்குப் பின் காரிய வெற்றி கிடைக்கும். நல்லவர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் சிறு சிறு சச்சரவுகள் ஏற்பட்டாலும் அவை தானாகவே தீர்ந்து விடும். கோபத்தைத் தவிர்த்து பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்வது நல்லது. உடல் நலத்தில் பெரிய பாதிப்புகள் இருக்காது. எனினும் கவனம் தேவை.
ரேவதி:
இந்த குருப் பெயர்ச்சியில் நன்மையும் தீமையும் கலந்த பலன்களாகவே இருக்கும். உத்தியோகஸ்தர்கள் பணிகளில் கவனம் செலுத்துவது அவசியம். நீண்டநாட்களாக வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். உறவினர் வருகை, சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது போன்ற மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும். பணவரவில் தடை இருக்காது.
பரிகாரம்: வியாழக்கிழமை தோறும் சித்தர்களை வழிபட திருமணத்தடை மற்றும் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
4தமிழ்மீடியா வாசகர்களுக்காக, பெருங்குளம் நவதிருப்பதி ஸ்தலம் பெருங்குளம் கோவில், கிராமம் பரம்பரை ஜோதிடர் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast) அவர்கள் எழுதிய பன்னிரு இராசிகளுக்குமான விரிவான பலன்களை ஒவ்வொரு இராசிகளுக்குமானபடங்களின் மேல் அழுத்தித் தெரிந்து கொள்ளலாம்.
- 4தமிழ்மீடியாவுக்காக: பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast)
உங்கள் ஜாதகத்தினடிப்படையிலான பிரத்தியேக பலன்களை கட்டண சேவை மூலம் அறிந்து கொள்ளலாம். ஜோதிடருன் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Comments powered by CComment