கும்பம்: அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம் : வேகத்துடன் விவேகத்தையும் கடைபிடிக்கும் கும்ப ராசி அன்பர்களே!
13-04-2022 அன்று குரு பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார். இதனால் குரு பகவானின் பார்வை ரண ருண ரோக - அஷ்டம - தொழில் ஸ்தானங்களின் மீது விழுகிறது.
குடும்பத்தில் வண்டி, வாகனம் உங்கள் விருப்பம்போல் அமையும். நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டு கிடந்தவர்கள் கூட இப்போது உடல்நிலையில் முன்னேற்றம் அடைவார்கள். கடன்களை முற்றிலுமாக அடைத்து விடுவீர்கள். எதிர்கள் உங்கள் பக்கம் திரும்ப மாட்டார்கள். சொத்து விவகாரங்களில் இருந்து வந்த பிரச்சினைகள் தீர்ந்து புதிய வீடு கட்டுவீர்கள்.
தொழிலில் ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் நல்ல லாபத்தை காண முடியும். அதற்காக இரவு - பகல் பார்க்காமல் உழைக்க வேண்டி வரலாம். சிறு தொந்தரவுகள் கூட வியாபாரத்தில் இருக்காது.
உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக வேலை காரணமாக வெளியூர்களுக்கு செல்ல வேண்டிவந்தால் ஒப்புக் கொள்ளுங்கள். அது உங்கள் எதிர்கால நன்மைக்காகவே. நீங்கள் கேட்காமலேயே சலுகைகள் தானாகவே கிடைக்கும். சிலர் பொறாமைப் படும் அளவிற்கு வசதிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.
பெண்களுக்கு வீட்டில் உள்ள அனைவரும் உங்கள் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். வண்டி, வாகனங்கள் புதிதாக வாங்குவீர்கள். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அதிகமாக செல்வாக்கு அலுவலகத்தில் காணப்படும்.
மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள், கவிதைப் போட்டிகள் போன்றவற்றில் கலந்து கொள்ள ஆர்வம் அதிகரிக்கும். வெற்றியும் கிடைக்கும்.
அரசியல்வாதிகள் மேடைப் பேச்சுகளில் உங்களுக்கு மரியாதை உயரும். நிறைய அனுபவங்களால் மனம் பக்குவப்படும். தொண்டர்களிடேயே நல்ல மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
கலைத்துறையினருக்கு மூத்த கலைஞர்களின் பாராட்டைப் பெற்று ஆசியும் கிடைக்கப்பெறுவீர்கள். கிடைக்கும் வாய்ப்புகளைத் தவற விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
நட்சத்திரப்பலன்கள்:
அவிட்டம் 3, 4ம் பாதங்கள்:
இந்த குருப் பெயர்ச்சியில் தொழில் வியாபாரம் ஏற்ற இரக்கமாக இருக்கும். எனினும் நஷ்டம் ஏற்படாது. கவலை வேண்டாம். அரசியல்வாதிகளுக்கு மகிழ்ச்சியும், துன்பமும் மாறி மாறி வரலாம். மாணவமணிகளும்,. கலைஞர்களும் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். சிலருக்குத் திருமண வாய்ப்புகள் அமையக்கூடும். பெண்களால் சிலர் அனுகூலம் பெறுவர். உடல் நலத்தில் கூடுதல் அக்கறை எடுத்துக் கொள்வது அவசியம். தொலை தொடர்பு செய்திகள் இனிமையானதாக இருக்கும்.
சதயம்:
இந்த குருப் பெயர்ச்சியில் குடும்பத்தில் ஏற்படும் சிறு மனக்குழப்பங்களை உங்கள் பொறுமையின் மூலம் தவிர்க்கலாம். தொழில் வியாபாரத்தில் அகலக்கால் வைக்காமல் எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து, திட்டமிட்டு நிதானமாகச் செயல்படுவதன் மூலம் சங்கடங்கள் குறையும். தெய்வ அனுகூலத்தால் பொருளாதார நிலையில் எவ்வித சங்கடமும் வராது. தேவைகள் இல்லாமல் கடன் பெறுவதை தவிர்க்கவும்.
பூரட்டாதி 1, 2, 3 ம் பாதங்கள்:
இந்த குருப் பெயர்ச்சியில் சிறு சிறு தடைகளுக்குப் பிறகு வெற்றி நிச்சயம் உண்டு. தெய்வ அனுகிரகம் உங்களைக் காக்கும். கடிதப் போக்குவரத்தின் மூலம் நல்ல தகவல்கள் வந்து சேரும். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளின் தொந்தரவு காணப்பட்டாலும், பேச்சு வார்த்தை மூலம் சரி செய்துவிடலாம். நண்பர்கள் பெருமளவில் உதவியாக இருப்பார்கள்.
பரிகாரம்: சனிக்கிழமை தோறும் முன்னோர்களை வழிபட வேலையில் இருக்கும் பிரச்ச்சனைகள் அனைத்தும் தீரும்.
4தமிழ்மீடியா வாசகர்களுக்காக, பெருங்குளம் நவதிருப்பதி ஸ்தலம் பெருங்குளம் கோவில், கிராமம் பரம்பரை ஜோதிடர் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast) அவர்கள் எழுதிய பன்னிரு இராசிகளுக்குமான விரிவான பலன்களை ஒவ்வொரு இராசிகளுக்குமானபடங்களின் மேல் அழுத்தித் தெரிந்து கொள்ளலாம்.
- 4தமிழ்மீடியாவுக்காக: பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast)
உங்கள் ஜாதகத்தினடிப்படையிலான பிரத்தியேக பலன்களை கட்டண சேவை மூலம் அறிந்து கொள்ளலாம். ஜோதிடருன் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Comments powered by CComment