மகரம்: உத்திராடம் 2,3,4 பாதங்கள் - திருவோணம் - அவிட்டம் 1,2 பாதங்கள் : உதவி கேட்டு வருபவர்களுக்கு உடனே உதவும் குணமுடைய மகர ராசி அன்பர்களே, 13-04-2022 அன்று குரு பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். இதனால் குரு பகவானின் பார்வை களத்திர - பாக்கிய - லாப ஸ்தானங்களின் மீது விழுகிறது.
குடும்பத்தில் கணவன் - மனைவி உறவு பலப்படும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் சென்று சந்தோஷ தருணங்களை அனுபவிப்பீர்கள். உங்களின் இளைய சகோதர சகோதரிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். அவர்களால் உண்டான சில கருத்து வேறுபாடுகள் மறைந்து வாழ்வில் நிம்மதி பிறக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நிச்சயமாகும். குழந்தை பாக்கியமும் கிடைக்கும்.
தொழில் - வியாபாரம் முன்னேற்றப் பாதையில் செல்லும். வாழ்க்கைத் துணையின் வழியிலும் சில உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். புதிய வியாபாரங்களில் தைரியமாக உங்கள் யோசனைகளைச் செயல்படுத்துவீர்கள்.
உத்யோகஸ்தர்களுக்கு புதிய வேலைக்காக அப்ளிகேஷன் போட்டு காத்திருக்கும் அன்பர்களுக்கு நல்ல பதில் வரும். சக பணியாளர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு கிடைப்பதால் உங்களால் அனைத்து வேலைகளையும் திறம்படச் செய்து முடிக்க முடியும்.
பெண்களுக்கு பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய கவலை உங்களுக்கு வந்து போகும். அவர்கள் ஆசைப்பட்டதை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும்.
மாணவர்கள் நண்பர்களுடன் வெளியில் செல்லும் போது கவனமாக சென்று வரவும். தொழிலுக்கான படிப்புகள் பயில விரும்புவோர் நல்ல முன்னேற்றத்தைக் காண முடியும்.
அரசியல் துறையினருக்கு கட்சிப்பணிகளுக்காக ஓய்வில்லாமல் உழைக்க வேண்டியும் வரலாம். முக்கியஸ்தர்கள் உங்களை வாழ்த்துவார்கள்.
கலைத்துறையினருக்கு சிலரின் தொந்தரவுகளால் மனம் அவ்வப்போது வெறுமை அடையும். வெளிப்புறப் படப்பிடிக்கு சென்று வருவீர்கள்.
நட்சத்திரப் பலன்கள்.
உத்திராடம்: 2, 3, 4ம் பாதங்கள்:
இந்த் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நீண்ட காலமாக மனத்தில் இருந்து வந்த சிந்தனைகள் செயல்வடிவம் பெறும். பணப்புழக்கத்தில் திருப்திகரமான நிலை இருந்து வரும். வாகனவசதிகள் சிலருக்கு அமையக்கூடும். மாண்வமணிகள் சிறப்பான முன்னேற்றம் பெற்று சாதனை படைக்கக்கூடும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நல்ல முறையில் நடைபெறும். அவ்வப்போது ஏற்படக் கூடிய சிறு சச்சரவுகளைப் பெரிதுபடுத்தாமல் விட்டு விடுவதே நன்மை தரும். உடல் நிலையில் பிரச்சனை எதுவும் இராது என்பதால் மருத்துவச் செலவுகள் குறையும். வங்கிகள், வியாபார நிலையங்கள் போன்ற இடங்களில் பணம் புழங்கும் இடங்களில் பணிபுரிபவர்களும், மின்சாரம் தொடர்பான இடங்களில் பணிபுரிபவர்களும் எச்சரிக்கையாய் செயல்பட்டு வருவது நல்லது. பெண்களால் சிலர் அனுகூலம் அடைய இடமுண்டு. சகோதர வழியில் மனக்கசப்புகள் நேரலாம்.
திருவோணம்:
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பெரும்பாலான விருப்பங்கள் நிறைவேறக் கண்டு மகிழ்வீர்கள். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். இதுவரை திருமணம் தள்ளிப்போய் வந்தவர்களுக்கு இப்போது நல்ல முறையில் திருமணம் நடைபெற வாய்ப்பு உண்டு. சிலர் மகப்பேறு பாக்யத்தையும் பெற்று மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களில் சிலர் உங்கள் மனைவியின் பெயரில் தொழில் அல்லது வியாபாரத்தைத் தொடங்கி உபரி வருமானத்தைப் பெறக்கூடும். எல்லாவகையிலும் உங்கள் மதிப்பும் மரியாதையும் உயரக்கூடிய நிலை உண்டு. வெளியூர்ப் பயணங்களை மேற்கொள்ள நேரும் போது எதிலும் கவனமாக இருப்பது அவசியம்.
அவிட்டம் 1, 2 ம் பாதங்கள்:
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தொழில், வியாபாரத்தில் பெரும் ஆதாயம் கிடைக்கப்பெற்று, பொருளாதார நிலையில் உயர்நிலை அடையும் வாய்ப்பு உண்டு. அரசு வழியில் எதிர்பார்க்கும் நன்மைகள் விரைவாக அமையும். கலைஞர்களில் சிலர் விருதுகளைப் பெறக்கூடிய நிலை உண்டு. பெண்களால் சிலருக்கு நன்மைகள் உண்டாகும். இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கு எல்லா வகையிலும் பலரும் பொறாமை கொள்ளும் வகையில் முன்னேற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. உத்தியோகஸ்தர்களில் சிலர் விருப்ப ஓய்வு பெற்று வேலையிலிருந்து விலகி ஏதேனும் தொழில் தொடங்குவீர்கள்.
பரிகாரம்: சனிக்கிழமை தோறும் சிவபெருமானை வழிபட பணம் சம்பந்தமான பிரச்சனைகள் தீரும்.
4தமிழ்மீடியா வாசகர்களுக்காக, பெருங்குளம் நவதிருப்பதி ஸ்தலம் பெருங்குளம் கோவில், கிராமம் பரம்பரை ஜோதிடர் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast) அவர்கள் எழுதிய பன்னிரு இராசிகளுக்குமான விரிவான பலன்களை ஒவ்வொரு இராசிகளுக்குமானபடங்களின் மேல் அழுத்தித் தெரிந்து கொள்ளலாம்.
- 4தமிழ்மீடியாவுக்காக: பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast)
உங்கள் ஜாதகத்தினடிப்படையிலான பிரத்தியேக பலன்களை கட்டண சேவை மூலம் அறிந்து கொள்ளலாம். ஜோதிடருன் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Comments powered by CComment