தனுசு: மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்:
தனக்கு தெரிந்தவற்றை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுக்கும் தனுசு ராசி அன்பர்களே,
13-04-2022 அன்று குரு பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். இதனால் குரு பகவானின் பார்வை அஷ்டம - தொழில் - அயன சயன போக ஸ்தானங்களின் மீது விழுகிறது.
குடும்பத்தில் ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டு. வீடு, மனை வாங்கவும் யோகம் உண்டு. விரையத்தில் குரு என்பதால் சுப விரையங்களான வீடு, மனை, வாகனம், திருமணம் போன்ற செலவுகள் இருக்கும். எதிர்பார்க்காமல் சில செலவுகள் உண்டாகும் என்றாலும் அவை அனைத்தும் முதலீடுகளே.
தொழில் செய்பவர்கள் புதிய கட்டிடங்கள் கட்டுதல், பெரிய கடைகளை வாடகைக்கு எடுத்தல் போன்ற செலவுகள் உண்டாகும். உங்கள் காரியங்களுக்குத் தடையாக இருந்தவர்கள் அனைவரும் விலகி விடுவார்கள். நீங்கள் நிம்மதியாக தொழிலில் முன்னேறலாம்.
உத்யோகஸ்தர்களுக்கு சக பணியாளர்களால் ஏற்பட்ட சில அவமதிப்புகள் சரியாகும். மற்றவர்கள் உங்களைப் புரிந்து கொள்வார்கள். சிலருக்கு எதிர்பார்த்திருந்த கடன் தொகை கிடைக்கும். அவற்றை சுப காரியங்களுக்குப் பயன்படுத்துவீர்கள்.
பெண்களுக்கு நீங்கள் விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உங்களை குறை கூறியவர்கள் விலகிச் செல்வார்கள். உங்களின் மனநிலையைப் புரிந்து கொள்வார்கள்.
மாணவர்களுக்கு மனதில் இருந்த சந்தேகங்கள் தீரும். பெற்றோர்கள் உங்கள் தேவைகளை உணர்ந்து பூர்த்தி செய்வார்கள். உடல் நிலையில் முன்னேற்றம் இருக்கும்.
அரசியல்துறையினருக்கு மேலிடத்தில் உங்களைப் பற்றி அவதூறு பேசி வந்தவர்களும் விலகிச் சென்று விடுவார்கள். கட்சி உங்களுக்கு சில முக்கிய பொறுப்புகளை கொடுக்கும்.
கலைத்துறையினர் உங்களின் திறமையை புரிந்து கொள்ளாமல் உதாசினப்படுத்தியவர்கள், உங்களைப் புரிந்து கொண்டு வாய்ப்பு தருவார்கள். அதை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளவும்.
மூலம்:
இந்த குருப் பெயர்ச்சியில் முயற்சிகள் பல செய்து நல்ல செயல்களைச் செய்து சிறப்படைவீர்கள். குடும்பத்திலும் சிறு சலசலப்புகள் ஏற்படும். வெளியில் கொடுத்திருந்த பணம் கைக்கு திரும்பி வரத் தாமதமாகும். இதனால் அத்தியாவசியத் தேவைகளுக்கு சிறிது கடன் வாங்க நேரிடலாம். சகோதர, சகோதரி வகையிலும் கருத்து வேறுபாடுகள் உண்டாகலாம். உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களும் உங்களுக்கு சிக்கல்களை ஏற்படுத்த நினைப்பார்கள்.
பூராடம்:
இந்த குருப் பெயர்ச்சியில் கடினமாக முயற்சி செய்து உங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். உடல் ஆரோக்யம் சிறப்பாக இருக்கும். குடும்பத்திலும் மருத்துவச் செலவுகள் ஏற்படாது. யாரையும் புண்படுத்தாமல் உங்கள் அணுகுமுறையால் வெற்றி பெறுவீர்கள். செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு உள்ள காலகட்டத்தில் குடும்பத்தில் பாகப்பிரிவினை சுமுகமாக நடக்கும். அசையாச் சொத்துக்களிலிருந்து வருமானம் வரத் தொடங்கும்.
உத்திராடம்:
இந்த குருப் பெயர்ச்சியில் பல விஷயங்களை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். வழக்கு விவகாரங்களில் திடீர் திருப்பங்கள் ஏற்படும். குறைந்த உழைப்பிலும் அதிக ஆதாயம் கிடைக்கும். அதேசமயம் புறம் பேசுபவர்களை இனம் கண்டு ஒதுக்கவும். குடும்பத்தில் ஏற்படும் சில அனாவசியப் பிரச்னைகளைக் கண்டும் காணாமல் இருக்கவும்.
பரிகாரம்: வியாழக்கிழமை தோறும் நவகிரக குருபகவானுக்கு விளக்கேற்றி வழிபட தூக்கத்தில் இருக்கும் பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
4தமிழ்மீடியா வாசகர்களுக்காக, பெருங்குளம் நவதிருப்பதி ஸ்தலம் பெருங்குளம் கோவில், கிராமம் பரம்பரை ஜோதிடர் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast) அவர்கள் எழுதிய பன்னிரு இராசிகளுக்குமான விரிவான பலன்களை ஒவ்வொரு இராசிகளுக்குமானபடங்களின் மேல் அழுத்தித் தெரிந்து கொள்ளலாம்.
- 4தமிழ்மீடியாவுக்காக: பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast)
உங்கள் ஜாதகத்தினடிப்படையிலான பிரத்தியேக பலன்களை கட்டண சேவை மூலம் அறிந்து கொள்ளலாம். ஜோதிடருன் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Comments powered by CComment