இவ்வார ராசிபலன்கள் - (14.06.2021-20.06.2021)

ஜோதிடம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பன்னிரு இராசிகளுக்குமான இவ்வார (14.06.2021-20.06.2021) இராசி பலன்கள். 4தமிழ்மீடியா வாசகர்களுக்காக, பெருங்குளம் நவதிருப்பதி ஸ்தலம் பெருங்குளம் கோவில், கிராமம் பரம்பரை ஜோதிடர் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast) அவர்கள் எழுதிய, ஒவ்வொரு இராசிகளுக்குமான பலன்கள்.

மேஷம் : (அசுவினி, பரணி, கிருத்திகை 1 ஆம் பாதம்)

இதுவரை மனதில் இருந்துவந்த குழப்பங்கள் படிப்படியாக குறையும். பணியிடங்களில் எதிர்பாராத சில மாற்றங்கள் ஏற்படும். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். நெருக்கமானவர்களிடம் தேவையற்ற விடயங்களைப் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது. கோபத்தைக் குறைத்து சாதுர்யமான பேச்சினை வெளிப்படுத்திச் சிறப்புச் சேர்க்கவும். பிள்ளைகளின் சுபகாரியங்களும், பூர்வீகச் சொத்துப் பிரச்சனைகளும், சுமுகமாகும்.

இடபம்:(கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்)

குடும்ப உறுப்பினர்களுடனான மகிழ்ச்சி அதிகரிக்கும். பயனங்கள் மகிழ்ச்சி தரும். உடல் ஆரோக்கியம் மேன்மையுறும். குடும்ப ஒற்றுமை வலுக்கும். பயணங்களின் மூலம் லாபம் கிடைக்கும். கோபம் குறையும். எதிர்காலம் தொடர்பான யோசனைகளும், தொழில் முயற்சிகளும் மேம்படும்.

மிதுனம்:(மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்)

குடும்பத்தவர்களுடன் தேவையற்ற பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரிகளுக்கு இதுவரை முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் விலகும். வீண் அலைச்சல்கள் அயர்ச்சி தரும். பிள்ளைகளின் ஆரோக்கியம் தொடர்பில் கவனம் வேண்டும். புதிய விடயங்களில் ஆர்வம் பிறக்கும். கணவன் மனைவி உறவு திருப்தியும், மகிழ்ச்சியுமுடையதாக இருக்கும்.

கடகம்: புனர்பூசம் 4 - ஆம் பாதம், பூசம், ஆயில்யம்

மனதில் புதிய நம்பிக்கையும், புத்துணர்ச்சியும் பிறக்கும். சூழ்நிலைகளை அறிந்து செயல்படின் நன்மை தரும். உயர்கல்வி தொடர்பான முயற்சிகள், எதிர்பார்த்த சில காரியங்கள் நிறைவேறுவதில் காலதாமதம் ஆகும். கோபங்கள் எதுவுமின்றி பொறுமையுடன் செயற்படுவதன் மூலம் நன்மையான பலன்கள் கிடைக்கும். புதுவிதமான அனுபவங்கள் ஏற்படும்.

சிம்மம்: மகம், பூரம், உத்திரம் 1- ஆம் பாதம்

குடும்ப உறுப்பினர்களிடம் அமைதி காப்பது நல்லது. முயற்சிகளில் எதிர்பாராத அலைச்சல்கள் உண்டாகலாம். சகோதரர் வழியிலான உதவிகள் கிடைக்கும். தாய்வழி உறவினர்களிடம் தேவையற்ற மனக்கசப்புக்கள் உருவாகுவதை தவிர்க்கவும். மாணவர்கள் கல்வி சார்ந்த செயல்பாடுகளில் பொறுமையுடன் நடக்க வேண்டும்

கன்னி: உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்

குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவுகளின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். எண்ணிய கருமங்கள் தாமதமாக நிறைவேறும். கலைஞர்களுக்கு வித்தியாசமான சிந்தனைகளும் கற்பனைத்திறனும் வெளிப்படும். வியாபாரிகளின் புதிய யோசனைகள் வலுப்பெறும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான செயற்பாடுகளில் கவனம் தேவை.

துலாம்: சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்

தொழில் முயற்சிகளில் சாதகமான பலன்களும், புதிய வெற்றிகளும் கிட்டும். குடும்பத்தில் பொறுமையுடன் செயற்படுவது அவசியம். திருமணமான புதிய தம்பதியர்களுக்கு நற் செய்திகள் கிடைக்கும். தொழிலாளர்களினால் சகாயமும், ஒற்றுமையும் அதிகரிக்கும். மனதில் எண்ணியவற்றையெல்லாம் வெளியில் கொட்டிவிட வேண்டாம்.

விருச்சிகம்:  விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை

தொழிலிடங்களில் உயர் அதிகாரிகளிடம் பொறுமை காக்க வேண்டும். வர்த்தகத்துறையினர் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த முதலீடுகளில் கவனங் கொள்வது அவசியம். புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. அரசு சார்ந்த விடயங்களில் பொறுமையுடன் செயற்பட வேண்டும். கணவன், மனைவிக்கிடையிலான கருத்து வேறுபாடுகள் மறையும்.

தனுசு: மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்

மனதில் குழப்பங்கள் நிறைந்த காலம். கணவன் மனைவி ஒற்றுமை மகிழ்ச்சி தரும். தொழில் முயற்சிகள் பலிதமாகும். கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை மேம்படும். புதிய விடயங்களை அறிந்து கொள்ளும் சந்தர்பங்கள் அமையும். மாணவர்கள் கல்வி தொடர்பான விடயங்களில் பொறுமையுடன் செயற்பட வேண்டும்.

மகரம்: உத்திராடம் 2,3,4 பாதங்கள் - திருவோணம் - அவிட்டம் 1,2 பாதங்கள்

செயலில் நிதானம் நன்மை தரும். பிள்ளைகளின் விடயங்களில் பொறுமை எதிர்பாராத சில புதிய வாய்ப்புகளின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். வேண்டும். புதிய வீடு மற்றும் மனை வாங்கும் யோகம் உண்டாகும். தாயின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிலருக்கு புதிய அறிமுகங்கள் மூலம் வாய்ப்புக்கள் உருவாகும்.

கும்பம்: அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்

உங்கள் முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் குறையும். புதிய திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். உடல் ஆரோக்கியத்தில் சகவனம் தேவை. கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். உறவுகள் மேம்படும். சிந்தனைகளில் தெளிவும், புதிய உற்சாகமும் காணப்படும்.

மீனம்: பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி

தொழில் முயற்சிகளில் வேண்டிய ஆலோசனைகளும் உதவியும் கிடைக்கும். வாழ்க்கைத்துணையுடன் மனம்விட்டு பேசுவதால் குடும்ப ஒற்றுமை மேம்படும். எண்ணிய கருமங்களை செய்து முடிக்கும் மனவலிமை கிடைக்கும். எதிர்பாராத பயணங்கள் ஏற்படும். வாக்குறுதிகளில் கவனம் தேவை. தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும்.

 

 

Comments powered by CComment

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 
We use cookies

We use cookies on our website. Some of them are essential for the operation of the site, while others help us to improve this site and the user experience (tracking cookies). You can decide for yourself whether you want to allow cookies or not. Please note that if you reject them, you may not be able to use all the functionalities of the site.