counter create hit பதிவுகள்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் கொழும்பிலுள்ள வீட்டில் பணிபுரிந்த நுவரெலியா, டயகமவைச் சேர்ந்த சிறுமி ஹிஸாலினி தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அண்மையில் உயிரிழந்தார்.

சீனாவை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, இலங்கையில் புதிய 1,000 ரூபாய் நாணயக் குற்றி, கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூலை 06) வெளியிடப்பட்டது. சர்வதேச ரீதியில், நாடுகளுக்கு இடையிலான இராஜதந்திர உறவை மேம்படுத்தும் நோக்கில், இன்னொரு நாட்டின் பெருமையான விடயங்கள் குறித்து, மற்றொரு நாடு, தன்னுடைய கௌரவங்களை வெளிப்படுத்துவது உண்டு. 

கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக் காலம், மக்களை நாளாந்தம் நெருக்கடிக்குள் தள்ளிக் கொண்டிருக்கின்றது. கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை, நாளொன்றுக்கு 3,000 என்கிற அளவைத் தொட்டிருக்கின்றது; உயிரிழப்புகளும் 30 என்கிற அளவில் ஒவ்வொரு நாளும் பதிவாகின்றது. உத்தியோகபூர்வ அறிவிப்புக்கு அப்பால், தொற்றாளர்கள் மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை, இன்னும் அதிகமிருக்கலாம் என்பது, சுகாதாரத்துறையினர் உள்ளிட்ட தரப்புகளின் அச்சமாகி இருக்கிறது. 

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க.) வெற்றி பெற்றிருக்கின்றது. கலைஞர் மு.கருணாநிதியின் மறைவுக்குப் பின்னர் தி.மு.க.வின் தலைவராக மு.க.ஸ்டாலின் எதிர்கொண்ட முதலாவது சட்டமன்றத் தேர்தலிலேயே அவர் அறுதிப் பெரும்பான்மையுள்ள வெற்றியைப் பெற்றிருக்கின்றார். இந்த வெற்றி, பத்து ஆண்டுகளாக ஆட்சி அதிகாரமின்றி எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க. ஆதரவாளர்களிடையே கொண்டாட்ட மனநிலையை ஏற்படுத்தியிருக்கின்றது. 

கொழும்புத் துறைமுக நகர ஆணைக்குழுச் சட்டம் கடந்த வாரம் நடைமுறைக்கு வந்தது. தெற்காசியாவின் பிரதான துறைமுகங்களில் ஒன்றான கொழும்புத் துறைமுகத்தோடு இணைந்த கடற்பகுதிக்குள் மணலை நிரப்பி புதிய துறைமுக நகர் உருவாக்கப்பட்டிருக்கின்றது. கொழும்பு மாவட்டத்தின் ஒரு பகுதியாக துறைமுக நகர் கடந்த நல்லாட்சிக் காலத்தில் இணைக்கப்பட்டாலும், அதன் ஆட்சியுரிமை என்பது துறைமுக நகர ஆணைக்குழு சட்டத்தின் ஊடாக சீனாவிடம் வழங்கப்பட்டிருக்கின்றது. 

இஸ்ரேலும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் இயக்கமும் கடந்த சில நாட்களாக ஆயுத முனையில் மீண்டும் பொருதிக் கொண்டிருக்கின்றன. இஸ்ரேலை நோக்கி ஹமாஸ் இயக்கம் எறிகணைத் தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் காசாப் பகுதியை இடைவிடாது தாக்கி வருகின்றது. ஹமாஸ் இயக்கத்தின் தாக்குதல்களில் இதுவரை 10 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இஸ்ரேலிய தாக்குதல்களில் காசாப் பகுதியில் 200க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 

தென் இலங்கையின் பௌத்த சிங்கள அடிப்படைவாத சக்திகள், ‘எதைத் தின்றால் பித்தம் தெளியும்’ என்கிற இக்கட்டான கட்டத்துக்கு வந்திருக்கின்றன. இனவாதத்தையும் மதவாதத்தையும் மூலதனமாக்கி, நாட்டின் ஆபத்பாண்டவர்கள் ‘ராஜபக்‌ஷக்களே’ என்று முழங்கி, 69 இலட்சம் வாக்குகளைப் பெற்றுக்கொடுத்து, அவர்களை மீண்டும் ஆட்சிக் கட்டிலில், இந்தச் சக்திகள் ஏற்றின. 

மற்ற கட்டுரைகள் ...