counter create hit பதிவுகள்

சீர்கெட்டிருந்த இந்தியாவுடனான உறவைப் புதுப்பிக்கும் முடிவுகளுக்கு, ராஜபக்‌ஷக்கள் வந்திருக்கிறார்கள். சீனாவை மட்டும் நம்பியிருந்த ராஜபக்‌ஷக்கள், இந்தியாவை வேண்டாத பங்காளியாகவே இதுவரை காலமும் கையாண்டு வந்திருக்கிறார்கள். குறிப்பாக, முள்ளிவாய்க்காலில் ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னர், ராஜபக்‌ஷக்கள் சீனாவையே முழுவதுமாக நம்பியிருக்கத் தலைப்பட்டார்கள். அது, இராஜதந்திர ரீதியில் இந்தியாவுடனான உறவைப் பலமாகச் சீர்குலைத்தது. 

தமிழ்த் தேசியக் கட்சிகளைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியொன்றை முன்னெடுத்துள்ளதாக திருமலை ஆயர் மற்றும் தென் கயிலை ஆதீனம் தலைமையிலான குழுவொன்று கடந்த வாரம் அறிவித்தது. பாராளுமன்ற உறுப்பினர்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அரசியல் கட்சிசாரா பிரபல சட்டதரணிகள் அடங்கிய குழுவொன்றை நியமிக்கவுள்ளதாகவும் அந்தக்குழு குறிப்பிட்டிருந்தது. ஆனால், அந்த அறிவிப்பு ஊடகங்களில் ஒருநாள் செய்தியாக மட்டுமே இடம்பெற்றிருந்தது. அதற்கு மேல் அந்த அறிவிப்புக்கான முக்கியத்துவத்தை அரசியல் கட்சிகளோ, ஊடகங்களோகூட வழங்கியிருக்கவில்லை. 

இன்றைய தமிழர் அரசியலில் தமிழரசுக் கட்சிக்குள் இருப்பவர்கள் குறளி வித்தை காட்டும் அளவுக்கு வேறு யாரும் காட்டுவதில்லை. கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தொடங்கி அந்தக் கட்சியின் பெரும்பாலான தலைவர்களும் நாளொரு வண்ணமும் பொழுதொரு நடிப்புமாக வித்தை காட்டிக் கொண்டிருப்பார்கள். கடந்த சில நாட்களாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நடிகர் திலகமாகவே மாறி நின்று அரங்காற்றிக் கொண்டிருந்தார். அவர் அரசியலுக்கு வந்த கடந்த ஒரு தசாப்த காலத்தில் தன்னையொரு தேர்ந்த நடிகரென்று பலமுறை நிரூபித்திருக்கிறார். ஆனால், கடந்த வாரம் அவர் வெளிப்படுத்திய நடிப்பு சிவாஜி கணேசனை மிஞ்சும் அளவுக்கானது. 

இலங்கையின் பௌத்த சிங்கள இனவாத அரசியல் களத்தில் ஒரு லிபரல் (தாராளவாத) முகமாக வலம் வந்த மங்கள சமரவீர மறைந்திருக்கின்றார். கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த அவர், சிகிச்சை பலனளிக்காத நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். 

உள்ளகப் பொறிமுறை ஊடாக பாதிக்கப்பட்ட (தமிழ்) மக்களுக்கு நீதி வழங்க முடியும் என்று ஐக்கிய நாடுகள் பொதுச்சபை அமர்வுகளில் கலந்து கொள்வதற்காக நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரஸ்தாபித்திருக்கிறார். அத்தோடு, இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்காக புலம்பெயர் (தமிழர்கள்) தரப்புக்கள் முன்வர வேண்டும் என்றும் கோரியிருக்கின்றார். ராஜபக்ஷக்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பெரும் நெருக்கடிகளைச் சந்தித்து நிற்கின்ற நிலையில், கோட்டாவின் இந்த அறிவிப்புக்கள் கவனம் பெறுகின்றன. 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தொடர்ந்தும் ‘கூட்டமைப்பின் தலைவர்’ என்கிற தகுதியோடு இருக்கிறாரா? என்கிற கேள்வி எழுந்திருக்கின்றது. கூட்டமைப்பில் தற்போது அங்கம் வகிக்கும் மூன்று பங்காளிக் கட்சிகளில் தமிழரசுக் கட்சி தவிர்ந்த தமிழ் ஈழ விடுதலை இயக்கமும் (ரெலோ), புளொட்டும் சம்பந்தனை நிராகரித்துக் கொண்டு சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான கூட்டணியொன்றுக்கான பூர்வாங்க வேலைகளில் ஈடுபட்டிருக்கின்றன. 

‘அரந்தலாவ படுகொலை’ தொடர்பிலான விசாரணைகளை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் முன்னெடுத்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம், உயர்நீதிமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்திருக்கின்றது. 1987ஆம் ஆண்டு, ஜூன் இரண்டாம் திகதி, அம்பாறை, அரந்தலாவ பகுதியில் வைத்து, இளம் பிக்குகள் அடங்கிய 33 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்தப் படுகொலையை, தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்டதாக, அரசாங்கம் குற்றஞ்சாட்டி வந்திருக்கின்றது. 

மற்ற கட்டுரைகள் ...