counter create hit பதிவுகள்

விமல் வீரவங்சவையும் உதய கம்மன்பிலவையும் அமைச்சுப் பதவிகளில் இருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ கடந்த வாரம் நீக்கியிருக்கின்றார். விமல், கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார ஆகியோர் அடங்கிய மூவர் அணியின் அமைச்சுப் பதவிகள் பறிக்கப்படும் என்று கடந்த ஆண்டு நடுப்பகுதியிலேயே எதிர்பார்க்கப்பட்டது. 

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தலைமையிலான சட்ட நிபுணர்கள் குழுவொன்று எதிர்வரும் சனிக்கிழமை அமெரிக்கா செல்கின்றது. அமெரிக்காவின் அழைப்பின் பேரில் செல்லும் இந்தக் குழுவில், ஜனாதிபதி சட்டத்தரணி கனக ஈஸ்வரனும் முன்னாள் சட்ட விரிவுரையாளரான கலாநிதி நிர்மலா சந்திரஹாசனும் உள்ளடங்குகின்றனர்.

பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொடே அத்தே ஞானசார தேரர் தலைமையில் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்கிற ஜனாதிபதி செயலணி அமைக்கப்பட்டிருக்கிறது. ஒரே நாடு ஒரே சட்டம் என்பதைச் செயற்படுத்துவதற்கான சட்ட வரைபினைத் தயாரித்தல் மற்றும் நீதி அமைச்சு ஏற்கனவே தயாரித்து வரும் சட்டத் திருத்தங்களை ஆராய்ந்து கருத்துக்களை முன்வைத்தல் என்கிற விடயங்களுக்காகவே குறித்த ஜனாதிபதி செயலணி உருவாக்கப்பட்டிருக்கின்றது. 13 அங்கத்தவர்களைக் கொண்ட குறித்த செயலணியில் 9 சிங்களவர்களும், 4 முஸ்லிம்களும் அடங்குகின்றனர். தமிழர்கள் எவரும் உள்ளடக்கப்படவில்லை. 

“...எங்களுக்கு அரசியல் தீர்வெல்லாம் தேவையில்லை; தமிழீழம் தான் தேவை. இங்கு வந்து அரசியல் தீர்வு பற்றி நீ(!) பேசத் தேவையில்லை. இதை நீ(!) இலங்கைப் பாராளுமன்றத்துக்குள் பேசு...” 

பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்த வலியுறுத்தும் சந்திப்பொன்று தமிழ் பேசும் கட்சிகளுக்கு இடையில் கடந்த செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) அழைப்பின் பேரில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் தமிழரசுக் கட்சி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த அனைத்து தமிழ்த் தேசியக் கட்சிகளும் பங்குபற்றின. அத்தோடு, மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணியும், ரவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸும் பங்கெடுத்தன. 

கடந்த திங்கட்கிழமை இரவு எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இந்தியப் படகொன்றின் மீது இலங்கைக் கடற்படையின் கண்காணிப்புப் படகு மோதியதில் மீனவர் ஒருவர் உயிரிழந்திருக்கிறார். தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த ராஜ்கீரன் என்கிற மீனவரே உயிரிழந்திருக்கிறார். அவருக்கு திருமணமாகி நாற்பது நாட்கள் மட்டுமே ஆகியிருக்கின்றன. இலங்கை – இந்தியக் கடற்பரப்பில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான மீனவர்களில் ஒருவராக ராஜ்கீரனும் மாறியிருக்கின்றார். 

மற்ற கட்டுரைகள் ...