counter create hit 7வது முறையாக டென்னிஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற ஜோகோவிச்

7வது முறையாக டென்னிஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற ஜோகோவிச்

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
7-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.
தரவரிசையில் முதல் 8 இடம் வகிக்கும் வீரர்கள் மட்டுமே கலந்துகொண்ட ஏ.டி.பி. இறுதி சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியில் உள்ள துரின் நகரில் நடைபெற்றது. இதில் பங்கேற்றிருந்த வீரர்கள் ரெட், கிரீன் என்று இரு பிரிவாக பிரிக்கப்பட்டிருந்தனர்.

ஒவ்வொரு வீரரும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற வீரர்களுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். 'ரவுன்ட்-ராபின்' முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிப்போர் அரையிறுதிக்கு தகுதி பெறுவார்கள். அதன்படி நடைபெற்ற லீக் ஆட்டங்களின் முடிவில் 'கிரீன்' பிரிவில் ஜோகோவிச் மற்றும் சின்னர் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர். 'ரெட்' பிரிவில் கார்லஸ் அல்காரஸ் மற்றும் டேனியல் மேத்வதேவ் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர்.

அதன்படி நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் இத்தாலி வீரர் சின்னர், ரஷிய வீரரான மேத்வதேவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார். தரவரிசையில் நம்பர் 1 வீரர் செர்பியாவை சேர்ந்த ஜோகோவிச் ஸ்பெயின் வீரரான கார்லஸ் அல்காரசை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார்.

இறுதி போட்டியில் சின்னர் மற்றும் ஜோகோவிச் பலப்பரீட்சை நடத்தினர். இதில் ஜோகோவிச் 6-3 மற்றும் 6-3 என்ற நேர் செட் கணக்கில் சின்னரை எளிதில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

இதன்மூலம் அவர் 7வது முறையாக ATP சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். அத்துடன் ரோஜர் பெடரரின் (Roger Federer) சாதனையையும் அவர் முறியடித்தார். அத்துடன் தரவரிசையில் 400 வாரங்கள் நீடித்து சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்பு ஜேர்மனியின் ஸ்டெஃபி கிராஃப் (Steffi Graf) 377 வாரங்கள் முதலிடத்தில் இருந்தார்.

இதுகுறித்து ஜோகோவிச் கூறுகையில்,

'இது ஒரு நல்ல சாதனை, 400 வாரங்கள் நம்பர் 1யில். வரலாற்றில் இது ஒருபோதும் செய்யப்படவில்லை. யாரோ ஒருவர் இறுதியில் அதை உடைப்பார்கள், ஆனால் இது நீண்ட காலம் இருக்கும் என்று நம்புகிறேன்' என தெரிவித்தார்.

Comments powered by CComment

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

Ula