ஈட்டி எறிதல் தரவரிசை வெளியானது.
ஒலிம்பிக் மட்டுமின்றி, டைமண்ட் லீக் போட்டிகளிலும் நீரஜ் சோப்ரா சாதித்ததால் அவருக்கு 'நம்பர் ஒன்' அந்தஸ்து கிட்டியுள்ளது.
கடந்த 5-ம் தேதி தோஹா டயமண்ட் லீக்கில் தங்கம் வென்றதன் மூலம் தனது 2023 சீசனை வெற்றிகரமாக தொடங்கியுள்ளார். இந்தப் போட்டியில் நீரஜ் சோப்ரா 88.67 மீட்டர் தூரம் எறிந்து சாதனை படைத்தார்.
இந்நிலையில், ஈட்டி எறிதல் வீரர்கள் தரவரிசையில் முதலிடம் பிடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
நீரஜ் சோப்ரா 1,455 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளார். ஆண்டர்சன் பீட்டர்ஸ் என்ற வீரர் ௧,433 புள்ளிகளுடன் 2ம் இடமும் செக்குடியரசின் சாகுப் வாட்லெஜ் (1,416 புள்ளி) 3-வது இடமும் வகிக்கிறார்கள்.
Comments powered by CComment