இந்திய பெண்கள் மற்றும் இலங்கை பெண்களுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய பெண்கள் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. 1 ரன்களை எடுப்பதற்குள் 1 விக்கெட்டை இலங்கை அணி பறிக்கொடுத்தது. நிதானமாக விளையாடிய சாமரி அதபத்து-ஹர்ஷிதா மாதவி ஆகிய இருவரின் விக்கெட்டை ஒரே ஓவரில் ராதா யாதவ் வீழ்த்தினார்.
அடுத்து வந்த வீராங்கனைகள் நிலாக்ஷி டி சில்வா 8, காஞ்சனா 11 ரன்னில் வெளியேறினார்கள். ஒரு முனையில் வெற்றிக்காக போராட்டிய கவிஷா தில்ஹாரி 47 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார்.
20 ஓவர் முடிவில் இலங்கை பெண்கள் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 104 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் ராதா யாதவ் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டி20 போட்டி வருகிற 25ஆம் திகதி நடைபெறும்.
Comments powered by CComment