ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 5 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடர்களில் விளையாடுகிறது.
அதன்படி, முதலில் களமிறங்கிய இலங்கை அணி தொடக்கத்தில் சிறப்பாக விளையாடிய அந்த அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது .12 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்கள் எடுத்த அந்த அணியின் நடுவரிசை வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் ரன்கள் எடுக்க தடுமாறியது . இதனால் இலங்கை 19.3 ஓவர்களில் 10 விக்கெட் இழந்து 128 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
ஆஸ்திரேலியா சார்பில் ஹேசில்வுட் 4 விக்கெட், மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 129 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஆரோன் பின்ச், டேவிட் வார்னர் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினர். அந்த அணி 11.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 101 ரன்கள் எடுத்திருந்தபோது மழை பெய்ததால் ஆட்டம் தடைபட்டது. மழை நின்றதும் மீண்டும் போட்டி தொடங்கப்பட்டது.
இறுதியில் ஆஸ்திரேலிய அணி 14 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 134 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. டேவிட் வார்னர் 70 ரன்னும், ஆரோன் பின்ச் 61 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
போட்டியின் ஆஸ்திரேலியாவின் ஹேசில்வுட் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
Comments powered by CComment