ரபேல் நடால் வெற்றி பெற்று பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
இந்நிலையில் ஆடவர் ஒற்றையர் பிரிவின் முதல் காலிறுதி ஆட்டத்தில் பிரெஞ்சு ஓபன் தொடரை 13 முறை வென்ற ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ரபெல் நடாலும், உலகின் 'நம்பர் 1' வீரரும், நடப்பு சாம்பியனுமான செர்பியாவை சேர்ந்த நோவக் ஜோகோவிச்சும் மோதினர்.
டென்னிஸ் உலகின் இரு பெரும் நட்சத்திரங்கள் மோதுவதால் இந்த போட்டிக்கு ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இருவரும் சம பலத்துடன் விளையாடினர். விறுவிறுப்பான நடைபெற்ற ஆட்டத்தில் 6-2, 4-6, 6-2, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் ரபேல் நடால் வெற்றி பெற்று பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
Comments powered by CComment