இண்டியன்வெல்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் ரபேல் நடாலை வீழ்த்தி அமெரிக்க இளம் வீரர் டெய்லர்
பி.என்.பி.பரிபாஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டிகள் அமெரிக்காவின் இண்டியன்வெல்சில் நடந்து வருகின்றன. இதில் ஆடவர் ஒற்றையர் இறுதி போட்டியில், உலக தரவரிசையில் 4வது இடத்தில் இருக்கும் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் மற்றும் உலக தரவரிசையில் 20வது இடம் வகிக்கும் 24 வயதுடைய டெய்லர் பிரிட்ஸ் ஆகியோர் மோதினர்.
இவர்களில், காயத்தினால் அவதிப்பட்ட அமெரிக்க வீரரான டெய்லர் போட்டியை எப்படி எதிர்கொள்ள போகிறோம் என்ற சந்தேகத்தில் இருந்துள்ளார். எனினும், இந்த போட்டியை தைரியமுடன் எதிர்கொண்டு விளையாடிய அவர், தொடக்கம் முதலே அதிரடி காட்டினார்.
இதில் யாருமே எதிர்பார்க் காத வகையில் நடால் அதிர்ச்சிகரமாக தோற்று சாம்பியன் பட்டத்தை இழந்தார். 20-வது வரிசையில் உள்ள பிரிட்ஸ் 6-3, 7-6 (7-5) என்ற நேர் செட் கணக்கில் நடாலை வீழ்த்தி பட்டம் வென்றார்.
இந்த ஆண்டில் நடால் சந்தத்த முதல் தோல்வியாகும். அவர் அரை இறுதியில் சக நாட்டை சேர்ந்த அல்காரசை 3 மணி நேரத்துக்கு மேலாக போராடிதான் வென்று இருந்தார். ஆனால் இறுதிப் போட்டியில் போராட முடியாமல் நேர் செட்டிலேயே அவர் வீழ்ந்தார்.
Comments powered by CComment