பீஜிங்கில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவை அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் புறக்கணித்தன.
91 நாடுகள் பங்கேற்ற பீஜிங் ஒலிம்பிக் போட்டி நேற்றுடன் நிறைவடைந்தது. சீனா, ஆஸ்திரேலியா, பிரேசில், அமெரிக்கா, நார்வே, இங்கிலாந்து, ஜெர்மனி, ஜப்பான், இந்தியா உள்பட 91 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இந்நிலையில், ஒலிம்பில் போட்டியின் பதக்கப் பட்டியலில், 16 தங்கம், 8 வெள்ளி, 13 வெண்கலம் என 37 பதக்கங்களுடன் நோர்வே முதலிடம் பிடித்துள்ளது.
ஜெர்மனி 12 தங்கம், 10 வெள்ளி, 5 வெண்கலம் உள்பட 27 பதக்கங்களுடன் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.
சீனா 9 தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலம் என 15 பதக்கங்களுடன் மூன்றாவது இடம் பிடித்தது.
அமெரிக்கா 8 தங்கம் உள்பட 25 பதக்கங்களுடன் 4-வது இடத்தையும், ஸ்வீடன் 18 பதக்கங்களுடன் 5-வது இடத்தை பிடித்துள்ளது.
Comments powered by CComment