15-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் மாதம் தொடங்க உள்ளது. இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் அகமதாபாத், லக்னோ ஆகிய இரண்டு புதிய அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், மற்றொரு புதிய அணியான அகமதாபாத் அணியின் பெயர் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அகமதாபாத் அணிக்கு ‘குஜராத் டைட்டன்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புதிய அணிக்கு ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
நடப்பு ஆண்டு ஐ.பி.எல். மெகா ஏலம் வரும் 12,13 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments powered by CComment