ஓமானில் நடைபெற்று வருகின்ற லெஜன்ட்ஸ் லீக் T20 தொடரில்,
இப்போட்டியின் வெற்றி வேர்ல்ட் ஜயன்ட்ஸ் அணிக்கு லெஜன்ட்ஸ் லீக் தொடரில் இரண்டாவது வெற்றியாகவும், ஆசிய லயன்ஸ் அணிக்கு இரண்டாவது தோல்வியாகவும் அமைகின்றது.
நாணய சுழற்சியில் வென்ற வேர்ல்ட் ஜயன்ட்ஸ் அணி, முதலில் பந்து வீச்சினை தேர்வு செய்தது.
இதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய ஆசிய லயன்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 149 ஓட்டங்கள் எடுத்தது. ஆசிய லயன்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் அதிகபட்சமாக அஸ்கார் ஆப்கான் 26 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 6 பெளண்டரிகள் அடங்கலாக 41 ஓட்டங்களை எடுத்தார்.
RJ சைட்போட்டம் மற்றும் மோர்னே மோர்கல் ஆகியோர் தலா 2 விக்கட்டுகளும் சாய்த்தனர்.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்கினை அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய வேர்ல்ட் ஜயன்ட்ஸ் அணி, குறித்த வெற்றி இலக்கினை வெறும் 13 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 152 ஓட்டங்களுடன் அடைந்தது.
வேர்ல்ட் ஜயன்ட்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் கெவின் பீட்டர்சன் அதிரடியான முறையில் ஆடி 38 பந்துகளுக்கு 7 சிக்ஸர்கள் மற்றும் 9 பெளண்டரிகள் அடங்கலாக 86 ஓட்டங்களை எடுத்திருந்தார். அதோடு கெவின் ஓ பிரய்னும் ஆட்டமிழக்காது 31 ஓட்டங்களுடன் வெற்றியை தம்வசப்படுத்தினர்
ஆசிய லயன்ஸ் பந்துவீச்சில் முத்தையா முரளிதரன் 2 விக்கெட்டுக்களையும், நுவன் குலசேகர ஒரு விக்கெட்டினையும் சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments powered by CComment