இலங்கை கிரிக்கெட் தொழில்நுட்ப மற்றும் ஆலோசனைக் குழுவின் உறுப்பினரான
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரொஷான் மஹாநாம தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
தனிப்பட்ட காரணங்களுக்காக தொழில்நுட்ப குழுவிலிருந்து அவர் விலகியுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை கிரிக்கெட்டின் அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட இந்தக் குழுவின் தலைவராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் அரவிந்த டி சில்வா உள்ளார்.
இதனிடையே, ஐசிசி இன் முன்னாள் போட்டி மத்தியஸ்தரான ரொஷான் மஹாநாம, பாகிஸ்தானில் இம்மாதம் 27ஆம் திகதி முதல் நடைபெறவுள்ள பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரின் போட்டி மத்தியஸ்தர்களில் ஒருவராக பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments powered by CComment