லங்கா பிரிமியர் லீக் தொடரின் நேற்றைய முதலாவது தகுதிக்காண் போட்டியில்
ஜப்னா கிங்ஸ் அணியை 64 ஓட்டங்களால் வெற்றிக்கொண்ட கோல் கிளேடியேட்டர்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஜப்னா கிங்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
இதன்படி, முதலில் துடுப்பாடிய கோல் க்ளேடியேட்டர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில், 5 விக்கெட்டுக்களை இழந்து 188 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. கோல் க்ளேடியேட்டர்ஸ் அணி சார்பில் துடுப்பாட்டத்தில் குஷல் மெண்டிஸ் 85 ஓட்டங்களையும், தனுஷ்க குணத்திலக்க 55 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தனர்.
இந்தநிலையில், 189 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய ஜப்னா கிங்ஸ் அணி 16.5 ஓவர்கள் நிறைவில், சகல விக்கட்டுக்களையும் இழந்து 124 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.
எவ்வாறாயினும், ஜப்னா கிங்ஸ் அணி நாளை இடம்பெறவுள்ள இரண்டாவது தகுதிக்காண் சுற்றில் தம்புள்ளை ஜயன்ஸ் அணியுடன் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments powered by CComment