இலங்கை கிரிக்கட் அணி தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி சம்பியனாகியுள்ளது.
தென்னாபிரிக்கா உடனான ஒரு நாள் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இலங்கை வீரர்களின் அபார பந்துவீச்சினால் இன்றைய போட்டியினை வென்று தொடரினை 2-1 என்ற வித்தியாசத்தில் இலங்கை அணி கைப்பற்றியது. இது இலங்கை டி20 போட்டியில் இந்தியா அணிக்கெதிரான வெற்றிக்கு பின்னர் இலங்கை அணி வெற்றி பெறும் தொடராக அமைந்துள்ளது.
மேலும் இது தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் எட்டு வருடத்திற்கு பிறகான இலங்கை அணியின் வெற்றியாக பதிவாகியுள்ளது. இலங்கை இறுதியாக 2013 ல் 4-1 என்ற கணக்கில் தென்னாபிரிக்காவிற்கு எதிராக தொடர் ஒன்றை கைப்பற்றி இருந்தது.
Comments powered by CComment