உலகின் பல்வேறு டி20 லீக் போட்டிகளில் விளையாடிய அனுபவத்தைக் கொண்ட 36 வயதான சீக்குகே பிரசன்ன,
கரீபியன் பிரீமியர் லீக், பங்களாதேஷ் பிரீமியர் லீக் மற்றும் பாகிஸ்தான் சுப்பர் லீக் உள்ளிட்ட லீக் தொடர்களில் விளையாடியுள்ளார்.
இந்த நிலையில், நேபாள கிரிக்கெட் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ஆண்டுக்கான எவரஸ்ட் பிரீமியர் லீக் டி20 தொடரில் சிட்வான் டைகர்ஸ் (Chitwan Tigers) அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்று செய்தி வெளியாகியுள்ளது.இதுகுறித்து உரிமையாளர் கிஷோர்,“சீக்குக்கே பிரசன்ன மதிப்புமிக்க வீரர்களில் ஒருவர் அவரது பந்துவீச்சு மற்றும் துடுப்பாட்டம் இரண்டும் ஒரு போட்டியின் போக்கை மாற்றும். எந்தப் பக்கத்திலும் மேட்ச் வின்னர் ஆக இருக்க வேண்டும்.
எனவே, உலகெங்கிலும் உள்ள டி20 லீக் தொடர்களில் வினையாடிய அவரது அனுபவம் சிட்வான் டைகர்ஸ் அணிக்கு இம்முறை சம்பியன் பட்டத்தை வெல்லவதற்கு உதவியாக இருக்கும் என நம்புகிறேன். அவர் எமது அணிக்கு நன்மதிப்பைப் பெற்றுக்கொடுப்பார்.ஆகவே, நேபாளத்தின் முதன்மையான விளையாட்டு நிகழ்வான எவரெஸ்ட் பிரீமியர் லீக்கில் அவருக்கு வர்த்தக திறன்களை அனுபவிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று சீக்குகே பிரசன்ன பற்றி தனது நம்பிக்கையை தெரிவித்தார்.
சீக்குகே பிரசன்ன தற்போது நடைபெற்று வருகின்ற டயலொக் SLC T20 தொடரில் தினேஷ் சந்திமால் தலைமையிலான ரெட்ஸ் அணிக்காக விளையாடி வருவதுடன், இதுவரை நடைபெற்ற போட்டிகளின் முடிவில் அதிக விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய பந்துவீச்சாளர்களில் 7 விக்கெட்டுக்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.எவரஸ்ட் பிரீமியர் லீக் தொடர் செப்டம்பர் மாதம் 25ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 09ஆம் திகதி வரையில் நடைபெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Comments powered by CComment