நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ளார்.
நடைபெற்ற ஆறு சுற்றுகளிலும் எந்த நாட்டு வீரரும், இரண்டாவது சுற்றில் நீரஜ் சோப்ரா வீசிய 87.58 மீட்டர் தூரத்தை முறியடிக்க முடியவில்லை.
இப்பதக்கமானது இந்தியாவுக்கான முதலாவது தடகளப் பதக்கம் மற்றும் இரண்டாவது தனிநபர் ஒலிம்பிக் தங்கப் பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா ஆறு பதக்கங்களை வென்றிருந்த நிலையில், ஏழாவது பதக்கமாக தங்க பதக்கதை வென்று கொடுத்துள்ளார் நீரஜ் சோப்ரா.
Comments powered by CComment