மேற்கிந்திய தீவுகள் அணி மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகளை கொண்ட டி20 போட்டிகள் இன்றுடன் முடிவடைந்தது.
முதல் மூன்று டி20 போட்டிகளில் வெற்றிப்பெற்று மேற்கிந்திய தீவுகள் அணி தொடரை கைப்பற்றிய நிலையில் நான்காவது போட்டியில் ஆஸ்திரேலிய அணியும் ஐந்தாவது போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியும் வெற்றிப்பெற்றன. நான்காவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 189 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களை இழந்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்கள் முடிவில் 185 ஓட்டங்களை பெற்று நான்கு ஓட்டங்களினால் தோல்வியை தழுவியது.
ஐந்தாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்கள் முடிவில் 199 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்களை இழந்தது. 200 ஓட்டங்களை இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில், 183 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்களை இழந்தது. நிநிமேற்கிந்திய தீவுகள் அணி 16 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றது. தொடரின் ஆட்டநாயகனாக ஹைடன் வால்ஸ் (Hayden Walsh) தெரிவு செய்யப்பட்டார் . இவர் தொடரில் மொத்தமாக 12 விக்கெட்களை எடுத்துள்ளார்.
Comments powered by CComment