இந்தியா மற்றும் இலங்கை இடையே நடைபெற இருந்த டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளின் திகதிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் ஜூலை 13ம் திகதி நடைப்பெறவிருந்த போட்டிகளே, ஜூலை 17ம் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அதன்படி பின்வருமாறு மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகள் நடைபெற முடிவாகியுள்ளது.
ஜூலை 18 - முதலாவது ஒரு நாள் போட்டி
ஜூலை 20 - இரண்டாவது ஒரு நாள் போட்டி
ஜூலை 23 - மூன்றாவது ஒரு நாள் போட்டி
ஜூலை 25 - முதலாவது டி20 போட்டி
ஜூலை 27 - இரண்டாவது டி20 போட்டி
ஜூலை 29 - மூன்றாவது டி20 போட்டி

இலங்கை இங்கிலாந்து சுற்றுப்போட்டிகள் முடிவடைந்த பின், இலங்கையின் தரவு ஆய்வாளர் (Data Analyst) ஜி.டி. நிரோஷன் (G. T. Niroshan), பேட்டிங் பயிற்சியாளர் (Batting Coach) கிராண்ட் ஃப்ளவர் (Grant Flower) ஆகியோருக்கு டெல்டா வகை கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளாகியதையடுத்தே தீடீர் ஒத்திவைப்பு முடிவு எடுக்கப்பட்டது. மேலும், அதே நேரத்தில் இலங்கை அணி இன்னும் இரண்டு நாட்களுக்கு தனிமைப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஆகவே புதிய ஆர்டி-பி.சி.ஆர் சோதனைகளுக்கு இலங்கையணி வீரர்களை உட்படுத்திய பின்னரே தெரியவரும், இலங்கை இந்திய அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெறுமா? இல்லையா? என.
Comments powered by CComment