பெப்ரவரி 24 அன்று, ஆரம்பமாகிய உக்ரைன் - ரஷ்ய யுத்தம் மூன்றாவது வாரத்தைக் கடக்கிறது. சில நாட்கள் அமைதியாக இருந்த ரஷ்ய தரப்புத் தாக்குதல்கள் மீண்டும் அதிகரித்துள்ளன.
உக்ரைன் மரியுபோலில் மக்கள் தஞ்சமடைந்திருந்த தியேட்டர் மீது குண்டுத் தாக்குதல் !
உக்ரேனிய துறைமுக நகரமான மரியுபோல் போர் தொடங்கியதிலிருந்து ரஷ்ய குண்டுவெடிப்புகள் குறையாத நகரம். இங்கே 500க்கும் அதிகமான மக்கள் அடைக்கலம் பெற்றிருந்த திரையரங்கரத்தின் மீது நேற்று குண்தாக்குதல் நிகழ்ந்துள்ளது.
சுவிற்சர்லாந்தில் கோவிட் வைரஸ் மீளுருவாக்கம் மீண்டும் அதிகமாகப் பரவுகின்றது !
சுவிற்சர்லாந்தில் புதிய கோவிட் வகைகள் கண்டறியப்பட்டுள்ளன. டெல்டா மற்றும் ஓமிக்ரான் வகைகளின் கலவையான பிறழ்வு, அதிகரித்து வரும் நாள்பட்ட நோய்த்தொற்றுகளில் கண்டறியப்பட்டது, இது டெல்டாக்ரான் எனும் ஒரு புதிய பெயரை கொண்டுள்ளது.
உக்ரைன் யுத்தம் மே மாதம் வரை நீடிக்கலாம் !
பெப்ரவரி மாதம் ஆரம்பித்த ரஷ்ய உக்ரேனிய யுத்தம் எதிர்வரும் மே மாதம் வரை நீடிக்கலாம் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் ஆலோசகர்களில் ஒருவரான ஓலெக்கி அரெஸ்டோவிச் எதிர்வு கூறியுள்ளார்.
இத்தாலியில் நாளை கோவிட் - 19 கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் புதிய ஆணை !
இத்தாலியில் கோவிட் -19 சுகாதாரக் கட்டுப்பாடுகளை படிப்படியாக எளிதாக்கும் திட்டங்களைக் கொண்ட நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ஆணையில் இத்தாலிய அரசாங்கம் நாளை வியாழக்கிழமை கையெழுத்திடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மூன்றாவது வாரத்தில் உக்ரைன் யுத்தம் - 13 ஆயிரத்துக்கும் அதிகமான ரஷ்யவீரர்கள் பலி !
உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்குமான போர் மூன்றாவது வாரத்தில் கடுமையான மோதலுடன் தீவிரமடைகிறது. உக்ரைனுக்கான அமெரிக்காவின் புதிய உதவிகளை இன்று அறிவிக்கிறது. ஜெலென்ஸ்கி நேட்டோவில் உக்ரைன் இணையும் யோசனையை கைவிடுகிறார். உக்ரைன் - ரஷ்ய பேச்சுவார்த்தைகள் நம்பிக்கையுடன் தொடர்கின்றன.
சுவிஸ் குடும்பங்களில் உக்ரைன் யுத்தம் விரைவில் தாக்கம் செலுத்தும் !
உக்ரைனில் நடக்கும் போர் விரைவில் சுவிஸ் மக்களின் வாழ்க்கைச் செலவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று Le Matin Dimanche எச்சரித்துள்ளார்.