சுவிற்சர்லாந்தில் பெரும்பாலான உணவுப் பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளன. தற்போதைக்கு ஆச்சரியமளிக்கும் வகையில் இது உயரவில்லை என்றாலும், சுவிஸின் மிகப்பெரிய பல்பொருள் அங்காடிகள் அடுத்த சில மாதங்களுக்குள் விலைகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கின்றன.
குறிப்பாக இறைச்சி உட்பட அதிக விலையுள்ள கால்நடை தீவனத்தை சார்ந்துள்ள விவசாயப் பொருட்களுக்கும் இது பொருந்தும். "உதாரணமாக, பன்றி இறைச்சி மற்றும் sausages, பூங்கா சார்ந்த பொருட்கள் உட்பட்டவை மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்," என Migros இன் நிதி இயக்குனர் Isabelle Zimmermann கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், "கோவிட் நெருக்கடியை விட உக்ரைனில் நடந்த போர் நிலைமையை மோசமாக்கியுள்ளது" என்று கூறினார்.
Coop லும் இதே நிலைமை எதிர்பார்க்கப்படுகிறது, அங்கும் "விலங்கு தீவனம் மற்றும் சுவிஸ் இறைச்சிக்கான விலை மாற்றங்கள் இருக்கும், " என்று நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ரெபேக்கா வீகா கூறுகிறார்.
சுவிஸ் புரொபஷனல் மீட் யூனியனின் துணை இயக்குனரான பிலிப் சாக்ஸ், வரும் மாதங்களில் அதிக விலையை எதிர்பார்க்கிறார், ஆனாலும் அதிகரிப்பு "ஒற்றை இலக்க சதவிகிதம்" என்று ஆறுதல் கடுத்துகின்றார்.
Comments powered by CComment