பிரான்சில் மே 31ந் திகதி முதல் அனைத்து பெரியவர்களுக்கும் கோவிட் தடுப்பூசிகள் போடும் திட்டத்தை அரசு நடைமுறைப்படுத்தவுள்ளதாக பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் நேற்று வியாழக்கிழமை அறிவித்தார்.
பிரெஞ்சு அரசாங்கத்தின் தடுப்பூசி திட்டத்தில் 50 வயதிற்குட்பட்டவர்களுக்கு ஜூன் 15 வரை தடுப்பூசி இல்லை என இருந்தபோதும், திட்டமிடப்பட்டதற்கு முன்னதாகவே அதனை ஆரம்பிக்கவுள்ளதாக பிரதமர் அறிவித்துள்ளார்.
இந்த திட்டம் சமீபத்திய வாரங்களில் துரிதப்படுத்தப்பட்டு வருவதே இதற்கான காரணம் என பிரதமர் பாரிஸின் புறநகரில் உள்ள சீன்-செயிண்ட்-டெனிஸ் டெபார்டெமென்ட்டில் உள்ள காக்னியில் உள்ள ஒரு தடுப்பூசி மையத்திற்கு வருகை தந்தபோது இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
Comments powered by CComment