இன்று காலை தெற்கு தைவானில் உள்ள 13 மாடி கட்டிட தொகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 46 பேர் பலியாகியுள்ளதுடன் பலர் காயமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு தைவானின் காவோசியுங் நகரில் உள்ள ஒரு குடியிருப்பு மற்றும் வணிகக் கட்டிடம் தீப்பிடித்து எரிந்ததாக உள்ளூர் தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.
தீ விபத்துக்கான காரணம் தெளிவாக அறியப்படாத நிலையில் தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருகிறது. கட்டிடத்தின் கீழ் பகுதியில் ஒரு காலத்தில் உணவகங்கள், கரோக்கி பார்கள் மற்றும் சினிமா திரை அரங்கு இருந்ததாகவும் ஆனால் அவை யாவும் தற்போது பயன்பாட்டில் இல்லை என்று கூறப்படுகிறது.
சுமார் 120 அடுக்குமாடி குடியிருப்புகளின் தொகுதியில் உள்ள பல குடியிருப்பாளர்கள் வயதானவர்கள் என கருதப்படுகிறது.
Comments powered by CComment