இத்தாலிய கடலோர காவல்படை மீன்பிடி படகில் இருந்து 539 புலம்பெயர்ந்தவர்களை மீட்டுள்ளது.
நேற்று சனிக்கிழமை இத்தாலி தீவில் ஒரே நாளில் மீட்கப்பட்ட மிக அதிக எண்ணிக்கையிலான புலம்பெயர்ந்தோர்களாக இது பதிவு செய்யப்பட்டுள்ளது.
கப்பலில் இருந்தவர்களில் பெண்களும் குழந்தைகளும் அடங்குவர். இவர்கள் லிபியாவிலிருந்து மத்திய தரைக்கடல் கடலில் பயணம் செய்த புலம்பெயர்ந்தவர்களாகவும் காயங்களுக்கு உட்பட்டவர்களாகவும் தென்பட்டவர்களாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதன் தொடர்பாக இத்தாலிய வழக்கறிஞர்கள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்
இதேவேளை ஐரோப்பாவை அடைய விரும்பும் மக்களின் முக்கிய வருகை துறைமுகங்களில் லம்பேடுசாவும் ஒன்றாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments powered by CComment