புனித பாப்பரசர் பத்து நாட்களின் பின் ரோமின் ஜெமெல்லி பாலிக்ளினிக்கிலிருந்து இன்று புதன் கிழமை காலை வத்திக்கான் திரும்பினார்.
சென்ற 4 ம் திகதி போப் பிரான்சிஸ் அவர்களது பெருங்குடலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவர் 2013 ம் ஆண்டில் பாப்பரசர் ஆனதின் பின், அவருக்கு மேற்கொள்ளப்பட்ட முதல் பெரிய அறுவை சிகிச்சை இதுவாகும்.
சென்ற ஜூலை மாத தொடக்கத்தில் இந்த அறுவை சிகிச்சை திட்டமிடப்பட்டது. சத்திர சிகிச்சையின் பின்னதான ஓய்வினை முடித்துக் கொண்டு அவர் இன்று வத்திக்கான் திரும்பினார். சத்திர சிகிச்சையின் பின்னதாக போப் உடல் நிலை ஆரோக்கியமாக இருப்பதாக வத்திக்கான அறிவித்துள்ளது.
Comments powered by CComment