counter create hit கோவிட்-19 கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதில் அவசரம்! : உலக நாடுகளை மீண்டும் எச்சரிக்கும் அதனோம்!

கோவிட்-19 கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதில் அவசரம்! : உலக நாடுகளை மீண்டும் எச்சரிக்கும் அதனோம்!

உலகம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

உலகின் பல நாடுகள் தமது மக்களுக்கு முழுமையாக கோவிட்-19 தடுப்பூசிகளை வழங்க முன்பே ஊரடங்கு கட்டுப்பாடுகளை விரைவாகத் தளர்த்துவது மிக ஆபத்தானது என்றும், இன்னமும் தடுப்பூசி பெறாதவர்களுக்கு இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் உலக சுகாதாரத் தாபனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் மீண்டும் ஒருமுறை எச்சரித்துள்ளார்.

டெல்டா வகை உள்ளிட்ட உருமாறிய கோவிட் வைரஸ்களின் பரவல் அதிகரித்து வருவதைத் தெரிவித்த அவர் பல நாடுகளில் தொற்று நிலமை இன்னமும் மோசமாக இருப்பதையும் சுட்டிக் காட்டினார். இதனால் அதிகளவு தடுப்பூசிகள் வழங்கப் பட்டு மந்தை நோய் எதிர்ப்பு சக்தி சமூகத்தில் உருவாகி இருப்பதை உறுதிப் படுத்தியதன் பின்பே தளர்வு நடவடிக்கைகளில் கவனமாக ஈடுபட வேண்டும் என அதனோம் உலக நாடுகளுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.

தெற்கு பசுபிக் நாடான ஃபிஜியில் கோவிட்-19 பெரும் தொற்றின் தாக்கம் அதிகரித்திருப்பதால் அந்நாட்டின் பாராளுமன்றம் மூடப் பட்டுள்ளது. மேலும் அங்கு நாடு தழுவிய லாக்டவுனுக்கு சுகாதார அமைப்புக்களும், மருத்துவ மனைகளும் அழைப்பு விடுத்துள்ளன. மறுபுறம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை அவுஸ்திரேலியாவின் 2 ஆவது மிகப் பெரும் நகரான மெல்பேர்னில் 4 ஆவது பெரும் தொற்று லாக்டவுனும் மீளப் பெறப்படவுள்ளது.

ஆனாலும் ஒரு சில முக்கிய கட்டுப்பாடுகள் பின்பற்றப் படும் என்றும் கூறப்பட்டுள்ளது. புதன்கிழமை நியூசிலாந்தில் சுமார் 30 000 மருத்துவத் தாதியினர் நாடளாவிய ரீதியில் 8 மணித்தியாலத்துக்கு அடையாள வேலை நிறுத்தம் செய்துள்ளனர். தமக்கு முறையான ஊதியம் வழங்கப் பட வேண்டும் மற்றும் வேலை நிபந்தனைகளில் ஏற்பட்ட பிழை என்பவற்றை வலியுறுத்தியே NZNO என்ற மருத்துவ தாதியர் சங்கத்தால் இந்த வேலை நிறுத்தம் மேற்கொள்ளப் பட்டது.

உலகளாவிய கொரோனா பெரும் தொற்று புள்ளி விபரம் :

மொத்த தொற்றுக்கள் : 174 802 246
மொத்த உயிரிழப்புக்கள் : 3 764 250
குணமடைந்தவர்கள் : 158 531 158
ஆக்டிவ் தொற்றுக்கள் : 12 506 838
மோசமான நிலையில் உள்ளவர்கள் : 85 665

நாடளாவிய புள்ளி விபரம் :

அமெரிக்கா : மொத்த தொற்றுக்கள் : 34 242 866 : மொத்த உயிரிழப்புக்கள் : 3 764 250
இந்தியா : 29 089 069 : 353 557
பிரேசில் : 17 038 260 : 477 307
பிரான்ஸ் : 5 719 937 : 110 137
துருக்கி : 5 300 236 : 48 341
ரஷ்யா : 5 156 250 : 124 895
பிரிட்டன் : 4 528 442 : 127 854
இத்தாலி : 4 235 592 : 126 690
ஆர்ஜெண்டினா : 4 008 771 : 82 667
ஜேர்மனி : 3 712 595 : 90 084
ஸ்பெயின் : 3 711 027 : 80 309
கொலம்பியா : 3 611 602 : 92 923
ஈரான் : 2 990 714 : 81 519
போலந்து : 2 876 289 : 74 363
மெக்ஸிக்கோ : 2 438 011 : 229 100
தென்னாப்பிரிக்கா : 1 704 058 : 57 183
கனடா : 1 395 410 : 25 791
பாகிஸ்தான் : 936 131 : 21 453
பங்களாதேஷ் : 815 282 : 12 913
ஜப்பான் : 765 619 : 13 743
சுவிட்சர்லாந்து : 698 798 : 10 844
இலங்கை : 210 661 : 1844
சீனா : 91 316 : 4636

Comments powered by CComment

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

We use cookies

We use cookies on our website. Some of them are essential for the operation of the site, while others help us to improve this site and the user experience (tracking cookies). You can decide for yourself whether you want to allow cookies or not. Please note that if you reject them, you may not be able to use all the functionalities of the site.