ஒருநாள் போட்டிகளில் தனது 50-வது சதத்தை விராட் கோலி பூர்த்தி செய்தார்.
ஒருநாள் போட்டிகளில் சச்சின் தெண்டுல்கர் 49 சதங்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. இந்த நிலையில் விராட் கோலி 50-வது சதமடித்து அந்த சாதனையை முறியடித்துள்ளார். 279 ஒருநாள் இன்னிங்சில் விளையாடியுள்ள விராட் கோலி தனது 50-வது சதத்தை நிறைவு செய்தார். ஆட்டத்தை நேரில் கண்டு களித்து வரும் சச்சின் தெண்டுல்கர் முன்னிலையில் அவரது சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார்.
இந்த நிலையில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 50 சதம் அடித்து சாதனை படைத்துள்ள விராட் கோலிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
"இன்று, விராட் கோலி தனது 50வது ஒருநாள் சதத்தை அடித்தது மட்டுமல்லாமல், சிறந்த விளையாட்டுத்திறனை வரையறுக்கும் சிறந்த மற்றும் விடாமுயற்சியின் உணர்வையும் எடுத்துக்காட்டியுள்ளார். இந்த குறிப்பிடத்தக்க மைல்கல் அவரது நீடித்த அர்ப்பணிப்பு மற்றும் விதிவிலக்கான திறமைக்கு ஒரு சான்றாகும். அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். எதிர்கால சந்ததியினருக்கு அவர் ஒரு அளவுகோல் நிர்ணயித்துக்கொண்டே இருக்கட்டும்"
என்று தெரிவித்து உள்ளார்.

Comments powered by CComment