இன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்து மதத்தில் முழுமுதற் கடவுளாகவும், வினை தீர்க்கும் தெய்வமாகவும் விநாயகர் திகழ்கிறார். விநாயகர் பிறந்த தினமான இன்று நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதையொட்டி நாடு முழுவதும் உள்ள விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. பக்தர்கள் விநாயகர் கோவிலில் நீண்ட வரிசையில் நின்று விநாயகரை வழிபட்டு செல்கின்றனர்.
அதேபோல், வீடுகளிலும் விநாயகர் சிலை வைத்து மக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். மேலும், பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடும் நடத்தப்பட்டு வருகிறது.
Comments powered by CComment