கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
தொற்று பாதித்தவர்களின் தொடர்பில் இருந்தவர்களின் எண்ணிக்கை 1080 ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் 327 பேர் சுகாதார பணியாளர்கள் ஆவர். காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்பு யாருக்கும் இருக்கிறதா? என்பதை கண்டறியும் பணியில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், நிபா வைரஸ் பாதிப்பை அடுத்து, கேரளாவின் கோழிக்கோட்டில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் வரும் செப்டம்பர் 24-ந்தேதி வரை ஒரு வாரத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதில் பள்ளிகள், தொழில்முறை கல்லூரிகள் மற்றும் கல்வி மையங்களும் அடங்கும். இதற்கிடையில், வாரம் முழுவதும் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Comments powered by CComment