புறநோயாளிகள் பிரிவில் மருத்துவர்கள், செவிலியர்கள் தாமதத்தை தவிர்க்க வேண்டும்.
அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் சரியான நேரத்தில் பணியில் இருக்க வேண்டும் என அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, புறநோயாளிகள் பிரிவு பொறுப்பு டாக்டர்கள் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை கட்டாயமாக பணியில் இருக்க வேண்டும். பிற மருத்துவர்கள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பணியில் இருக்க வேண்டும்.
புறநோயாளிகள் பிரிவில் மருத்துவர்கள், செவிலியர்கள் தாமதத்தை தவிர்க்க வேண்டும். உள் நோயாளிகள் பிரிவை 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தாமதமாக பணிக்கு வருவதை தவிர்க்க வேண்டும்.
மேலும், அரசு மருத்துவமனை முதல்வர்கள், டீன்கள், மருத்துவ சேவைகள் இணை இயக்குநர் மற்றும் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் ஆகியோர், வெளிநோயாளிகளுக்கான நேரத்தைக் கட்டாயமாக கடைபிடிப்பதை மாவட்ட கலெக்டர்கள் உறுதிசெய்ய வேண்டும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments powered by CComment