பொதுத்தேர்வு நடைபெறும் மையங்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 12-ம் வகுப்புக்கு வருகிற 13-ந்தேதியும், 11-ம் வகுப்புக்கு 14-ந்தேதியும், 10-ம் வகுப்புக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதியும் அரசு பொதுத்தேர்வுகள் தொடங்கவுள்ளது.
இந்த நிலையில் பொதுத்தேர்வுகள் நடைபெறும் மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. மாணவர்கள் தேர்வெழுதும் போது மின்தடை ஏற்படாமல் இருக்க முன்னேற்பாடுகள் எடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
மாணவர்கள் படிக்க ஏதுவாக இரவு நேரங்களில் மின்தடை செய்யக்கூடாது என்றும் மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. மேலும் டிரான்ஸ்பார்மர் உள்ளிட்டவற்றில் பிரச்சனைகள் ஏற்பட்டால் அதனை உடனே சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
Comments powered by CComment