6 மாநிலங்களில் காலியாக உள்ள 7 சட்டசபை தொகுதிகளுக்கும் நவம்பர் 3-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும்.
6 மாநிலங்களில் காலியாக உள்ள 7 சட்டசபை தொகுதிகளுக்கும் நவம்பர் 3-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும்.இந்த தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் என தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
நவம்பர் 6-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.இடைத்தேர்தல் குறித்த அதிகாரப்பூர்வ அரசு அறிக்கை அக்டோபர் 7-ம் தேதி வெளியிடப்பட்டும். தேர்தல் நடைபெறும் அந்தந்த தொகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அன்றிலிருந்து அமலுக்கு வரும்.
வேட்புமனு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு அக்டோபர் 14 வரை உள்ளது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை அக்டோபர் 15ஆம் தேதி நடைபெறும். வேட்புமனுவை வாபஸ் பெற அக்டோபர் 17 கடைசி நாளாகும்.
Comments powered by CComment