நாட்டின் 16-வது துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் ஆகஸ்ட் 6 ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று (செவ்வாய் கிழமை) தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய ஜூலை 19 ஆம் தேதி கடைசி நாளாகும். ஜூலை 20 ஆம் தேதி வேட்பு மனுவுக்கான பரிசீலனை நடைபெறும். தற்போது துணை ஜனாதிபதியாக உள்ள வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. எனவே, அதற்கு முன்பாக புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்வது அவசியமாகும்.
Comments powered by CComment