மத்திய பாதுகாப்புத்துறையின் கீழ் இயங்கும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தானியங்கி முறையில் பறக்கும் தொழில் நுட்ப செயல் விளக்க விமானத்தை இன்று பரிசோதனை செய்துள்ளது.
கர்நாடகா மாநிலம் சித்ரதுர்காவில் உள்ள வான்சோதனை தளத்தில் முதல்முறையாக நடைபெற்ற இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக அமைந்தது. முற்றிலும் தானியங்கி முறையில் இயங்கக்கூடிய இந்த விமானத்தின், புறப்பாடு, பறக்கும் வழி, தரையிறங்குதல் உள்ளிட்ட அனைத்து பரிசோதனைகளும் துல்லியமாக நடைபெற்றன.
இந்த சோதனை வெற்றிகரமாக அமைந்ததாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Comments powered by CComment