கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பெண் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மாநாட்டை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று தொடங்கி வைக்கிறார்.
இவர்களுடன் மத்திய - மாநிலங்களின் பெண் அமைச்சர்கள், பெண் சபாநாயகர்கள், பெண் துணை சபாநாயகர்கள் ஆகியோரும் பங்கேற்கின்றனர்.
மாநாட்டில் அரசியல் சட்டம் மற்றும் பெண் உரிமைகள் என்ற தலைப்பில் குஜராத் சட்டசபை சபாநாயகர் நிமாபென் ஆச்சார்யா, லோக்சபா முன்னாள் சபாநாயகர் மீரா குமார், மார்க்சிஸ்ட் முன்னாள் எம்.பி., பிருந்தா காரத், தி.மு.க எம்.பி., கனிமொழி ஆகியோர் பேச உள்ளனர்.
இதேபோன்று பல்வேறு தலைப்புகளில் பெண் எம்.பி.,க்கள், எம்.எல்.ஏக்கள் இந்த மாநாட்டில் பேச உள்ளனர்.
Comments powered by CComment