மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகை ரத்து செய்யப்பட்டதால், ரயில்வேக்கு கூடுதலாக ரூ.1,500 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
இதற்கு பதிலளித்து ரயில்வே துறை கூறும்போது, கடந்த 2020 மார்ச் 20 ஆம் திகதி முதல் 2021 மார்ச் 31 ஆம் திகதி வரை மூத்த குடிமக்களுக்கான கட்டணச்சலுகை நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காலகட்டத்தில் 7.31 கோடி மூத்த குடிமக்கள் கட்டண சலுகையின்றி பயணம் செய்துள்ளனர். அதில் 60 வயதிற்கு மேற்பட்ட 4.46 கோடி ஆண்களும், 58 வயதிற்கு மேற்பட்ட 2.84 கோடி பெண்களும் 8,310 திருநங்கைகளும் பயணித்துள்ளனர்.
அவர்கள் மூலம் ரூ.3,464 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கட்டண சலுகை நீக்கப்பட்டதால், கூடுதலாக ரூ.1500 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
Comments powered by CComment