திரிபுரா முதல் மந்திரியாக தேர்வு செய்யப்பட்ட மாணிக் சாஹா பா.ஜ.க.வின் மாநில தலைவராகவும், பாராளுமன்ற மேலவை எம்.பி.யாகவும் உள்ளார்.
இதையடுத்து, பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள், தங்களின் சட்டமன்ற குழு தலைவராக மாணிக் சாஹாவை தேர்வு செய்தனர். புதிய முதல் மந்திரியாக தேர்வு செய்யப்பட்டுள்ள சாஹாவிற்கு முன்னாள் முதல் மந்திரி பிப்லப் குமார் தேப் வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிலையில், திரிபுராவின் புதிய முதல் மந்திரியாக மாணிக் சாஹா அகர்தலா நகரில் உள்ள ராஜ்பவனில் இன்று காலை 11.30 மணிக்கு பதவியேற்றார். அவருடன் புதிய மந்திரிகளும் பதவியேற்று கொண்டனர்.
Comments powered by CComment